கன்னியாகுமரி அய்யா வைகுண்ட சாமியின் 194-வது அவதாரத் திருநாள் விழாவினை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்திற்கு வரும் மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தென் மாவட்டங்களில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்த ஆன்மீக விழாவிற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அய்யா வைகுண்ட சாமியின் அவதார திருநாளை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் வசதிக்காக மார்ச் 4 (புதன்கிழமை) அன்று தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளில் பொதுத்தேர்வு ஏதேனும் இருப்பின், அதில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. அவர்கள் வழக்கம்போலப் பள்ளிகளுக்குச் சென்று தேர்வுகளில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தாயன்புக்கு ஏஞ்கிய பஞ்ச்! குரங்கு குட்டியின் சோக வாழ்க்கை! இணைய வாசிகளின் ஏக்கத்தை தீர்த்து வைத்த வீடியோ!
மார்ச் 4-ம் தேதி அளிக்கப்படும் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, அதே வாரத்தில் வரும் மார்ச் 7-ம் தேதி (சனிக்கிழமை) அன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பணி நாளாகச் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம் அய்யா வழி பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விழாவிற்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தற்போது முடுக்கிவிட்டுள்ளது.
இதையும் படிங்க: மோடியின் அப்பா பற்றி விமர்சனம்!! உதயநிதிக்கு வலுக்கும் கண்டனம்! கிழித்து தொங்கவிட்ட பாஜக தலைவர்!