வங்கக்கடலில் அடுத்தடுத்து குறைந்த காற்றல் தாழ்வு பகுதி உருவாவதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. குறிப்பாக நேற்று கொடுத்த அறிவிப்பின்படி 24 மணி நேரத்தில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. அதன் அடிப்படையில் வங்கக்கடலில் தற்பொழுது ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது.
பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு வடமேற்கு திசையில் நகர்வதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாவும், மேலும் இது வலு பெறக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
அதாவது இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து அதிகபட்சமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மேலும் இது கரையை நோக்கி இலங்கையை ஒட்டி நகர்ந்து வரக்கூடிய சூழலில் தமிழ்நாட்டினுடைய தென் மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புகள் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வானிலை எச்சரிக்கை..! சென்னை உட்பட 6 மாவட்டங்களில் கனமழை..! உஷார் மக்களே..!
குறிப்பாக நாளைய தினம், தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பும், நாளை மறுநாள் மூன்று மாவட்டங்கள் கனமழைக்கான வாய்ப்பும் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் அடுத்து வரக்கூடிய 48 மணி நேரத்தில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
தற்பொழுது பணி காலத்தில் இருந்தாலும் கூட நமக்கு மார்ச் மாதம் என்பது கோடை காலத்தினுடைய தொடக்க நிலை அதற்கு முன்பாகவே நமக்கு மழைக்கான வாய்ப்புகள் தற்பொழுது உருவாகியுள்ள இந்த குறைந்த காற்று தாழ்வு பகுதியினால் ஏற்படக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதையும் படிங்க: என்ன மக்களே ரெடியா? காரைக்குடியில் சீமான் பேட்டி? வெளியான முக்கிய தகவல்..!!