கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா, ஒரு கல்லூரி மாணவனாக இருந்தவர். அவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, 2023 ஆம் ஆண்டு, சூர்யா மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அவரது உயிரிழப்பு, விபத்து என்று முதலில் கருதப்பட்டாலும், அவரது தந்தை இதை ஆணவப் படுகொலை என்று குற்றம்சாட்டினார். சூர்யாவின் தந்தை, தனது மகனின் மரணத்திற்கு பெண்ணின் குடும்பத்தினரே காரணம் என்று காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். ஆனால், விசாரணையில் உள்ளூர் காவல்துறையின் செயல்பாடு நியாயமாக இல்லை என்று சூர்யாவின் தந்தை முருகன் கருதினார்.
இதையும் படிங்க: சுத்தமா நம்பிக்கை இல்ல! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. ஐகோர்ட் போட்ட தடாலடி உத்தரவு..!

இதன் காரணமாக, அவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, வழக்கை சிபிசிஐடி அல்லது சுதந்திரமான விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரினார்.
சூர்யாவின் உயிரிழப்பு தொடர்பான விசாரணையில், பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிரான ஆணவப் படுகொலை என்ற குற்றச்சாட்டு, இந்த வழக்கில் முக்கியமான பகுதியாக உள்ளது. கல்லூரி மாணவர் மரணத்தில் ஆணவக் கொலை என்ற சந்தேகம் உள்ளதால் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.
தொடர்ந்து நடைபெற்று வரும் ஆணவ படுகொலைகளை சுட்டிக்காட்டி நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் அதிகரித்து வருவதாக உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது. ஆணவப் படைகளை அதிகரித்தாலும் உண்மைகள் வெளி வருவதில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பொன்முடி வழக்கு.. எதன் அடிப்படையில முடிச்சு வச்சீங்க? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!