இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் தன் மீது பதியப்பட்ட பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி இளைஞர் தாக்கல் செய்த வழக்கு.
நெல்லையை சேர்ந்த இளைஞர் விஜய் கடந்த 2014 ஆண்டு கல்லூரியில் படிக்கும் போது இளம்பெண்ணுடன் நட்பாக பழகி காதலித்து வந்துள்ளனர் இளைஞரின் தாத்தா வீடும், அந்த இளம்பெண்ணின் வீடும் அருகாமையில் உள்ளது. எனவே தாத்தா வீட்டிற்கு அடிக்கடி செல்லும் இளைஞர், அந்த இளம்பெண்ணுடன் அவ்வப்போது உல்லாசமாக இருந்தனர்
பின்னர் பல்வேறு காரணாங்களால் அந்த இளைஞர், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்து வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயற்சித்த போது இளம்பெண் தன்னை திருமணம் செய்வதாக கூறி 9 ஆண்டுகளாக தொடர்சியாக பாலியல் உறவில் இருந்து விட்டு தற்போது, வேறோரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்வதாக புகார் அளித்தார்.
இதையும் படிங்க: அவசர அவசரமாக SIR... 6 கோடி பேருக்கு வாக்குரிமை பறிபோகும்... சீமான் எச்சரிக்கை...!
அந்த புகாரின் படி இளைஞர் மீது வள்ளியூர் போலீசார் தொடர்சியான பாலியல் பலாத்காரம், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். வள்ளியூர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
தன் மீது பதியப்பட்டு விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
விசாரணையின் போது மனுதாரர் வழக்கறிஞர் ஜெயமோகன், மனுதாரர் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆரம்ப கட்டத்தில் அவர் எந்தவித ஏமாற்றும் எண்ணத்தில் இல்லை.
மேலும் காலம் கடந்து மனுதாரர் மீது இளம்பெண் புகார் கொடுத்துள்ளார் எனவே வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்..இந்த மனு நீதிபதி புகழேந்தி விசாரணை செய்து தீர்ப்புக்காக வழக்கை ஒத்தி வைத்திருந்தார்.
இன்று இறுதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி புகழேந்தி. மனுதாரரும், இளம்பெண்ணும் ஏறக்குறைய 9 ஆண்டுகளாக பாலியல் உறவில் இருந்து வந்துள்ளனர்.
இந்த நீண்ட கால பாலியல் உறவின் போது புகார்தாரர் எதிர்ப்பு தெரிவிக்கமால் இருந்தது, இருவரின் சம்மதத்தின் அடிப்படையிலான உறவு என்பதை குறிக்கிறது. மேலும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதற்கான எந்த குற்றச்சாட்டும் தெரியவில்லை.
மேலும் நீதிமன்றம் தற்போது நிலவும் சமூக யதார்த்தங்களை அறிந்திருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய நெருக்கம் இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது.
இருவர் தாமாக முன்வந்து ஒரு உறவில் ஈடுபட்டு நீண்ட காலத்திற்கு உடல் ரீதியான நெருக்கத்தில் ஈடுபடும்போது, அந்த உறவின் அடுத்தடுத்த முறிவு, ஏற்பட்ட பின் குற்றவியல் சட்டத்தினை பயன் படுத்துவது தவறு.
இருவருக்கிடைய என்ன நடக்கிறது என்பது தனிப்பட்ட விருப்பத்தின் எல்லைக்குள் உள்ளது. அந்த உறவு பாசத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டதா, திருமண எதிர்பார்ப்பு அல்லது வெறும் பரஸ்பர இன்பம் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதுபோன்ற விஷயங்களை நீதிமன்றம் உறுதியாகத் தீர்மானிப்பது சாத்தியமில்லை.
தனிப்பட்ட நடத்தையை ஒழுக்கப்படுத்தவோ அல்லது தனிப்பட்ட ஏமாற்றத்தை வழக்காக மாற்றவோ குற்றவியல் செயல்முறையைப் பயன்படுத்த முடியாது,
ஏனெனில் நீதிமன்றங்கள் தனிமனித ஒழுக்கத்தை பார்த்து தீர்ப்பு வழங்க முடியாது வற்புறுத்தல், ஏமாற்றுதல் அல்லது இயலாமையால் சம்மதம் பாதிக்கப்படும் இடங்களில் மட்டுமே சட்டம் தலையிடுகிறது.
தனிப்பட்ட முரண்பாடுகளை தவறான நடத்தையாக சித்தரிக்க யாருக்கும் உரிமை இல்லை.உணர்ச்சி ரீதியான விளைவுகளைத் தீர்ப்பதற்கு சட்டத்தை தவறாக பயன்படுத்த முடியாது.
சமீப காலமாக இது போன்ற வழக்குகளை நீதிமன்றம் அதிகமாக கண்டு உள்ளது.மனுதாரருக்கு எதிராக வழக்குத் தொடருவது என்பது சட்ட செயல்முறையை துஷ்பிரயோகம் செய்வதற்குச் சமம் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே மனுதாரர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: அப்பாவுக்கு கிட்னி குடுத்தது தப்பா? செருப்பால அடிக்க வந்தாங்க!! லாலு மகள் கண்ணீர்!