மதுரையில் தங்களது மகள் காதல் திருமணம் செய்து கொண்டதை பொறுக்க முடியாமல் இளைஞரை பெண் வீட்டார் கார் ஏற்றிக் கொல்லப்பட்டதாக வெளியாகும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் பொட்டப்பட்டியைச் சேர்ந்தவர் இளைஞர் சதீஷ்குமார். இவர் ராகவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. தனது மகள் காதல் திருமணம் செய்து கொண்டதில் பெற்றோருக்கு விருப்பமில்லை என கூறப்பட்டுள்ளது.
திருமணம் செய்து கொண்ட சதீஷ்குமார் மற்றும் ராகவி இருவரும் திருச்சியில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்கள் நகைகளை திருடி சென்றதாக ராகவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மோசடி புகார்... மதுரை மேயர் கணவரை சென்னையில் வைத்து தூக்கிய போலீஸ் - பின்னணி என்ன?

தொடர்ந்து இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பிறகு காவல் நிலையத்தில் இருந்து விசாரணை முடிந்து இருசக்கர வாகனத்தில் சதீஷ்குமாரும் ராகவியும் சென்றுள்ளனர். அப்போது மதுரை மேலூர் அடுத்த அய்யாப்பட்டின நான்கு வழிச்சாலையில் ராகவியின் பெற்றோர் தரப்பினர் காரை ஏற்றி கொலை செய்ய முற்பட்டதாக கூறப்படுகிறது.
இருசக்கர வாகனத்தின் மீது காரை ஏற்றியதில் சதீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மகளின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் கார் ஏற்றிக் கொள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அம்மானா சும்மாவா? இறந்த மகனின் கையை பிடித்தபடியே உயிரை விட்ட தாய்...