மதுரை விமான நிலையம் தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இது மதுரை நகரின் வளர்ச்சிக்கும், திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற சுற்றுப்புற மாவட்ட மக்களின் பயணத் தேவைக்கும் பெரிதும் உதவி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இங்கு உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையம் 2009-ஆம் ஆண்டிலிருந்தே மதுரை விமான நிலையத்தை பெரிய அளவில் மேம்படுத்த திட்டமிட்டு வருகிறது. முக்கியமாக ஓடுபாதையை நீட்டிப்பது, புதிய டெர்மினல் கட்டுவது, அதிநவீன வசதிகளை சேர்ப்பது ஆகியவை இதில் அடங்கும். மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக நிலம் எடுப்பு பணி நடத்த சின்ன உடைப்பு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் இது தொடர்பாக முறைகேடர் சென்றபோது அமைச்சர் மூர்த்தி தடுத்து நிறுத்தியதாக புகார் தெரிவித்துள்ளனர். சாதி வன்மத்துடன் தங்களிடம் நடந்து கொண்டதாக அமைச்சர் மூர்த்தி மீது கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தங்களை உரிமையில் பேசியதாகவும் அவர்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர். இதை எடுத்து அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க கிராம மக்கள் முயற்சி செய்தனர்.
இதையும் படிங்க: கிராம சுகாதார பணியாளர்களை தவிக்க விட்ட திமுக அரசு... வறுமையில் வாடும் குடும்பங்கள்..! குரல் கொடுத்த சீமான்..!
அப்போது அங்கு சென்ற போலீசார் மூர்த்தியின் உருவ பொம்மையை அவர்களிடம் இருந்து பரிதி சென்றனர். உருவ பொம்மையை எரிக்க விடாமல் பறித்துச் சென்றதால் கிராம மக்கள் போலீசாரை பின் தொடர்ந்து சென்று முழக்கங்களை எழுப்பினர். போலீசாரிடமிருந்து உருவ பொம்மையை மீட்க பின் தொடர்ந்து சென்றனர். கிராம மக்களை போலீசார் அப்போது தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு ஒத்து வராது… அது காங்கிரசுக்கே தெரியும்..! முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்..!