மாரிதாஸ் மலைய்ச்சாமி என்பவர் தமிழகத்தில் வலதுசாரி சிந்தனை கொண்ட யூடியூபராக அறியப்படுபவர். முன்பும் பல்வேறு சர்ச்சைக்குரிய வீடியோக்கள் மற்றும் ட்வீட்களுக்காக அவர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன. அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல விவகாரங்களில் அவரது கருத்துகள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த முறை கரூர் சம்பவம் அவரை மீண்டும் பொது கவனத்திற்குக் கொண்டு வந்தன.
குறிப்பாக தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஊடக ஆர்வலர்கள் மீது தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில், பிரபல யூடியூபர் மாரிதாஸ் மலைய்ச்சாமி மீண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் செயல் என்று ஒரு தரப்பினர் குற்றம் சாட்ட, அவதூறு மற்றும் பொய்த் தகவல்களைப் பரப்பியதாக மற்றொரு தரப்பினர் நியாயப்படுத்துகின்றனர்.

மாரிதாஸ், மதுரையைச் சேர்ந்தவர். யூடியூப் சேனலின் மூலம் அரசியல், சமூக விவகாரங்கள் குறித்து தீவிரமான விமர்சனங்களை முன்வைத்து வருபவர். பாஜக ஆதரவாளராக அறியப்படும் இவர், கடந்த காலங்களில் திமுக அரசு, கொரோனா தொடர்பான விவகாரங்கள், சமூகப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அவருக்கு முன்பும் பல வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதையும் படிங்க: சாக்கு பையால் முகத்தை மூடி குழந்தை துன்புறுத்தல்..! அங்கன்வாடி ஊழியர் அதிரடி கைது..!
வலதுசாரி ஆதரவாளரும் பிரபல யூடியூபருமான மாரிதாஸ் மதுரையில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக முதலமைச்சர் விஜய் தொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுகளை மாரிதாஸ் முன்வைத்து வந்தார். தற்போது கைதாகி உள்ளார்.
இதையும் படிங்க: "அவனை எங்களுக்கு காமிங்க"..! சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர்...! கொந்தளித்த மக்கள்..!!