கேரள மாநிலம் கொழிக்கோட்டைச் சேர்ந்த 41 வயதான தீபக் என்பவர், சமூக வலைதளத்தில் வைரலான ஒரு வீடியோவால் ஏற்பட்ட கடும் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.தீபக் கொழிக்கோட்டின் கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர். ஒரு தனியார் ஜவுளி நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார்.
அவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த வெள்ளியன்று அவர் வேலை சம்பந்தமாக கண்ணூர் நோக்கி பேருந்தில் பயணித்தார். அப்போது, பயணியான சிம்ஜிதா முஸ்தபா என்ற பெண், தீபக் தன்னை பாலியல் ரீதியாக தொடர்பு கொண்டதாகக் குற்றம்சாட்டி ஒரு சிறு வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றினார்.அந்த வீடியோவில், பேருந்து நெரிசலாக இருந்ததால் தீபக் நின்ற இடத்தில் அவரது முழங்கை தனது உடலில் தொட்டதை காட்டியிருந்தார். இது விபத்து அல்ல, திட்டமிட்ட "பாலியல் எல்லை மீறல்" என்று அவர் குற்றஞ்சாட்டினார். இந்த வீடியோ வைரலாகி 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது.

இதனால் தீபக் மீது கடுமையான ஆன்லைன் தாக்குதல்கள், அவதூறுகள், தரப்பு விமர்சனங்கள் எழுந்தன. வீடியோ வெளியான சில நாட்களிலேயே தீபக் கடும் மன அழுத்தத்துக்கு ஆளானார். ஆனால், இது போலியான குற்றச்சாட்டு என்றும், சமூக வலைதள புகழுக்காக உருவாக்கப்பட்டது என்றும் பலரும் கூறினார்கள். அவர் மீது இதற்கு முன் எந்தவித புகாரும் இல்லை என்றும், அமைதியான, உழைப்பாளியான நபர் என்றும் கூறினர்.
இதையும் படிங்க: கேரளா வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!! எப்போ..?? எதுக்கு தெரியுமா..??
ஆனால் தொடர்ந்து வந்த சைபர் தாக்குதல்களைத் தாங்க முடியாமல், தீபக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த வீடியோவை பார்வையிட்ட பலரும் தற்செயலாக நடந்த செயல் என்பது போல தான் தோன்றுகிறது என்றும் வீடியோ ஸ்லோ செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருப்பதாகவும் ரீல்ஸ் மோகத்திற்காக அந்த பெண் இவ்வாறு செய்திருப்பதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அப்பாவி ஒருவரின் உயிர் போக காரணமான அந்த பெண் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: நாளை 4 மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு...!