மெக்சிகோவின் முன்னணி போதைப்பொருள் கடத்தல் தலைவனான 'எல் மெஞ்சோ' (El Mencho) என அழைக்கப்படும் நெமேசியோ ஒசெகுவேரா, அமெரிக்காவின் ஆதரவுடன் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து, மெக்சிகோவின் பல மாகாணங்களில் வன்முறை வெடித்துள்ளதால், அங்குள்ள இந்தியக் குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மெக்சிகோவில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஜாலிஸ்கோவின் டபல்பாவில் நடந்த சோதனையின் போது, மெக்சிகன் பாதுகாப்புப் படையினர் போதை பொருள் கடத்தல் தலைவர் நெமேசியோ 'எல் மென்சோ' ஒசேகுரா செர்வாண்டஸைக் ராணுவத்தின சுட்டனர். இந்த நடவடிக்கையில் காயமடைந்த எல் மென்சோ மெக்சிகோ நகரத்திற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படும் போது இறந்தார்.
அமெரிக்காவிற்கு ஃபெண்டானில் மற்றும் பிற போதைப்பொருட்களைக் கடத்துவதற்குப் பெயர் பெற்ற கார்டெல்லை குறிவைத்து நடத்திய துப்பாக்கிச் சண்டையில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். உலகின் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரான இவரது மரணத்திற்கு பழிவாங்கும் நோக்கில், அவரது 'ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்' (CJNG) கும்பலைச் சேர்ந்தவர்கள் நெடுஞ்சாலைகளை முடக்கியும், வாகனங்கள் மற்றும் கடைகளுக்குத் தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!!
வன்முறை தீவிரமடைந்துள்ள ஜாலிஸ்கோ, தமுலிபாஸ், மிச்சோகன், குரேரோ மற்றும் நியூவோ லியோன் ஆகிய மாநிலங்களில் உள்ள இந்தியர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கூட்டமான இடங்களைத் தவிர்க்கவும், பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மெக்சிகோவின் பல பகுதிகளில் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், சுற்றுலாத் தலங்களிலும் பதற்றம் நிலவுகிறது. ஜாலிஸ்கோ ஆளுநர் மற்றும் மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் ஆகியோர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். எல் மெஞ்சோவின் மறைவைத் தொடர்ந்து, போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே அதிகாரப் போட்டி காரணமாக மேலும் வன்முறை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
'எல் மென்சோ' ஆதரவாளர்கள் சாலைகளில் தடைகளை ஏற்படுத்துவது, வாகனங்களை எரிப்பது, விமான நிலையங்களை சூறையாடுவது போன்ற பயங்கரமான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விமான நிறுவனங்கள் புவேர்ட்டோ வல்லார்டாவிற்கு விமானங்களை நிறுத்தியுள்ளன. அமெரிக்க அதிகாரிகள் எல் மென்சோவின் மரணத்தை உறுதிப்படுத்தியதோடு, பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள அமெரிக்க குடிமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: டிரம்ப் மீது கொலை முயற்சி?.. கையில் துப்பாக்கியுடன் ரிசார்ட்டுக்குள் நுழைந்த இளைஞர் சுட்டுக்கொலை...!