நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் சட்டப்பேரவை இன்று கூடியது. மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் கோவை அமுதன் கொலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருப்பதாக திமுக எம்எல்ஏ எ.வ. வேலு தெரிவித்தார். தொடர்ந்து கோவை மாணவன் அமுதன் கொலை, மற்றும் திருவொற்றியூர் மாணவன் தனுஷ் கொலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.
அமைச்சர் சரத் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டிங் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து போதைப் பொருள் கலாச்சாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. போதைப் பொருள் விவகாரங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டது. அப்போது விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார். திமுக ஆட்சியில் தான் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்ததாக குற்றம் சாட்டினார்.

திமுக உறுப்பினர் பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு அரை வயது சிறுமி பலியானதற்கு திமுக ஆட்சியில் எடுத்த நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினார். போதைப் பொருள்கலாச்சாரம் அதிகரித்ததால் தான் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அது என்ன பவுடர்..? திமுக ஆட்சியில் போதைப்பொருள் விற்றீர்களா..? திமுக - தவெக காரசார விவாதம்..!!
கடந்த திமுக ஆட்சியில் 40 சதவீத போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளதாகவும் இது காவல்துறை கொடுத்த அறிக்கை என்று தெரிவித்தார். திமுக ஆட்சியில் காவல்துறை அளித்த அறிக்கை வைத்து தான் பேசுகிறேன் என்றும் தமிழக வெற்றி கழகத்தின் அறிக்கையை வைத்து கூறவில்லை எனவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். போதைப் பொருள் அதிகரிப்பு காரணமாக தான் திமுகவை மக்கள் தூக்கி எறிந்ததாக பேசி இருந்தார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் அமளி ஏற்பட்டது.
இதையும் படிங்க: மானிய கோரிக்கை மீதான விவாதம்..! கூடியது சட்டப்பேரவை.. பரபரப்பான விவாதம்..!!