தமிழக வெற்றிக்கழக ஆட்சி கவிழும் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறியாமையில் பேசி வருகிறார் உண்மை நிலை அவருக்கு இன்னும் தெரியவில்லை பாவம் அதனால் தான் அப்படி பேசிக் கொண்டிருக்கிறார். தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் விமர்சனம்
நெல்லை மாவட்டம் நாங்குநேரி ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும் தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான நிலையத்திற்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், தூத்துக்குடி ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தமிழக முதல்வர் 15, 16 நாட்கள் ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார். அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர்களுடன் சுமார் ஆறு மணி நேரம் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. நிறைய தகவல்களை பரிமாறி உள்ளோம். அமைச்சரவை கூட்டம் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. வரக்கூடிய நாட்களில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நல்லபடியாக தமிழக வெற்றிக்கழக அரசு பதவி ஏற்று தமிழக அரசின் முதல் பட்ஜெட் நல்லபடியாக தாக்கல் செய்யப்படும்.
தமிழக வெற்றிக்கழக ஆட்சி கவிழும் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறியாமையில் பேசி வருகிறார். உண்மை நிலை அவருக்கு இன்னும் தெரியவில்லை. பாவம் அதனால் தான் அப்படி பேசிக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் ராணுவத்தின் அதிரடி ஆபரேஷன்... 24 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை; ஆயுதக் குவியல் பறிமுதல்!
அறியாமையில் தான் பேசிக் கொண்டிருக்கிறார் உண்மை நிலைக்கு அவர் இன்னும் வரவில்லை. மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு மரியாதை கொடுப்பது மாதிரி தெரியவில்லை. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் தெரியவில்லை. தலைமைக்கும் தெரியவில்லை, மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு முதலில் தலைவணங்க வேண்டும்.
தமிழக முதல்வரின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு 100% மக்கள் அனைவரும் வரவேற்கிறார்கள் 55 நாட்களில் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். அதனை நேரில் பார்த்துக் கொண்டு வருகிறோம். மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள் மக்கள் வரவேற்பது போன்று அனைவரும் வரவேற்க வேண்டும்
இதையும் படிங்க: #BREAKING: விண்ணில் பாய தயாரான விக்ரம்- 1 ராக்கெட்..! கவுண்டவுன் திடீர் நிறுத்தம்..!