கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், மற்றும் அவரது மனைவி, மகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துகுவிப்பு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உட்பட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், வழக்கில் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிக்கையை மேற்கோள் காட்டி வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்த கடலூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை 6 மாத காலத்திற்குள் முடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சொத்து குவிப்பு வழக்கில் மீண்டும் சிக்கிய துரைமுருகன்.. ஆப்பு வைத்த ஐகோர்ட்..!
இதையும் படிங்க: அரசு பதில் சொல்லியே ஆகணும்..! பொன்முடிக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் காட்டம்..!