சென்னையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கினார். மழைக்காலத்தில் மின்சார விநியோகத்தில் எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மின்வாரியத்தில் கூடுதலாக 200 முதல் 400 பணியாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாக அமைச்சர் கூறினார். சென்னை முழுவதும் சுமார் 600 முதல் 1000 மின்மாற்றிகளை புதிதாக மாற்றும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர்களை சற்று உயரமான இடங்களுக்கு மாற்றி பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.

டிஎன்பிஎஸ்சி மூலம் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக அமைச்சர் விளக்கினார். மின்வாரியத்தில் மீட்டர் ரீடிங் எடுப்பதற்கு பணியாளர்கள் குறைவாக இருப்பதால் கூடுதலாக 5000 பணியாளர்களை நியமிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "அதான் தவெக அரசு"..! தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை..! அமைச்சர் நிர்மல் குமார் உறுதி.!!
புது வண்ணாரப்பேட்டையில் மூன்று நாட்கள் மின்தடை என்று திமுக தரப்பில் கூறப்படுவது முற்றிலும் தவறான தகவல் என அமைச்சர் மறுத்தார்.டெண்டர் முறையின் மூலமே மின்வாரியம் பணியாளர்களைத் தேர்வு செய்து வருவதாக அவர் வலியுறுத்தினார். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தற்போதைக்கு இரண்டரை மாதங்களுக்கு ஒத்திவைத்துள்ளதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வீடியோ தெளிவா இல்லையா..? ரகுபதிக்கு எப்படி தெரியும்.? அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!