தமிழ்நாடு ›

உறுதி! அறுதி! தாய் மீது சத்தியம் சொல்லி கமலாலயம் பக்கம் U-TURN அடிச்ச இபிஎஸ்! ரகுபதி விளாசல்

பாஜக உடனான கூட்டணி நிலைப்பாட்டிலேயே மாற்றம் கண்ட எடப்பாடி பழனிச்சாமி தொகுதி மறு சீரமைப்பு நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்பது வேடிக்கையாக இருப்பதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தில் முதல் ஆளாக குரல் எழுப்புவேன் என்ன எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தார். அவருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுக்கும் வகையில் எக்ஸ் தனத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பாஜக கூட்டணி நிலைப்பாட்டிலேயே மாற்றம் கண்டவர். தொகுதி மறுசீரமைப்பு நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனச் சொன்னால் கேட்கிறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்வாங்க என்ற பழ(னிசாமி)மொழி தான் நினைவுக்கு வருகிறது.

பாஜகவோடு ஒட்டும் இல்லை. உறவும் இல்லை எனக் கூறி வந்த அதிமுக, அப்படியே U-Turn அடித்து கமலாலயம் பக்கம் வண்டியைத் திருப்பியது போலத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்திலும் தன் நிலைப்பாட்டை மாற்றிவிட்டு இன்று வியாக்கியானம் பேசுகிறது. ஒரு மனுஷன் பொய் பேசலாம். ஆனா, ஏக்கர் கணக்கில் சொல்லக் கூடாது.கமலாலய பேச்சைத் தன்னுடைய மவுத் பீஸில் பேசுவதற்கு பழனிசாமி வெட்கப்பட வேண்டும்.தொகுதி மறுசீரமைப்புக்காக கலர் கலராக ரீல் விடுகிறார் பழனிசாமி என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: த.வெ.க.வுக்கு வலை வீசும் TTV… விஜய் என்.டி.ஏ. கூட்டணிக்கு வர அழைப்பு!

தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த போதே தெரிவித்தது நான்., எனச் சொல்லியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.,சட்டமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சத்தமே இல்லாமல் கடந்த மார்ச் 25-ம் தேதி டெல்லியில் போய் பழனிசாமி எதற்காகப் போய் இறங்கினார்? டெல்லியில் செய்தியாளர்கள் கேட்ட போது, பிரத்யோகமான நபரைப் பார்க்க வரவில்லை., டெல்லி அதிமுக அலுவலகத்தைப் பார்க்க வந்தேன் என ஏன் பொய் சொன்னார்? கள்ளக் கடத்தல்காரர்கள் மாதிரி கார்கள் மாறி மாறி சென்று, பழனிசாமி இறங்கிய இடம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா வீடு என்று விமர்சித்துள்ளார்.

பாஜகவுடனான கள்ளக் கூட்டணியை நல்ல கூட்டணி ஆக்கப் போனவர், தொகுதி மறுசீரமைப்பு பற்றிப் பேசினாராம். இன்றைக்குப் புதுக்கதை எழுதுகிறார். ‘’ஒரு மனுஷன் பொய் பேசலாம். ஆனா, ஏக்கர் கணக்கில் சொல்லக் கூடாது. அது எப்படிடா? நெஞ்சுல கொஞ்சம் கூட ஈரம் இல்லாமல் இவ்வளவு பெரிய பொய் சொல்லுற’’ என்று செந்திலை பார்த்து கவுண்டமணி சொல்லும் காமெடி போல இருக்கிறது என்று அமைச்சர் ரகுபதி நக்கலடித்துள்ளார். பாஜகவைப் பார்த்து கோரிக்கை வைக்கவே பழனிசாமிக்கு துப்பில்லை; வக்கில்லை; மானமில்லை. இவர் ‘தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை’ என்கிறார். கமலாலயத்தில் எழுதிக் கொடுக்கும் பேச்சுகளை எல்லாம் தன்னுடைய மவுத் பீஸில் பேசுவதற்கு பழனிசாமி வெட்கப்பட வேண்டும்., மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை நடத்தி, தமிழ்நாட்டில் நாடாளுமன்ற இடங்களைக் குறைப்பதுதான் பாசிச பாஜகவின் சதித் திட்டம். இந்தச் சதியை நாட்டிலேயே முதன்முதலாக அம்பலப்படுத்தி அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருபவர் தமிழ்நாடு முதலமைச்சர்தான் என்று தெரிவித்தார்.

உறுதியாக… அறுதியாக… தாய் மீது ஆணையாக… ’பாஜகவுடன் கூட்டணி இல்லை’ என்றெல்லாம் சிலகாலம் வரை சொல்லி அதிமுக தொண்டர்களை ஏமாற்றி, தமிழ்நாட்டு மக்களை நம்ப வைத்து கடைசியில் கழுத்தறுத்துவிட்டு அமித்ஷா காலில் விழுந்த கோழை பழனிசாமி பேசுகிறார். ’தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை’ என்று… இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சராக பதவி பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நடப்பது திருட்டு முன்னேற்ற கழக ஆட்சி..! பந்தாடிய இபிஎஸ்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी