தவெக ஆச்சரிய இருந்தாலும் தற்குறியாக இருந்தாலும் எந்த குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களது குறி தேர்தல் குறி, யாரைக் கண்டும் அஞ்ச வேண்டியது கிடையாது எங்களுக்கு போட்டியும் கிடையாது. களத்தில் இருக்கக்கூடிய அனைவரையும் சமமாகத்தான் பார்க்கிறோம். அவர்கள் அனைவருமே அரசியல் எதிரிகள் தான் தனிப்பட்ட எந்த விரோதமும் அவர்களிடம் கிடையாது என திமுக அமைச்சர் ரகுபதி கடுமையாக சாடியுள்ளார்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து செங்கிப்பட்டி, ஆலங்குடி, கொத்தமங்கலம், விராட்சிலை ராங்கியம், சோத்துப்பாளை, கொப்பம்பட்டி ஆகிய ஏழு வழித்தடங்களில் ஏழு புதிய பேருந்து சேவையினை தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும் இதில் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ சின்னதுரை, மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் உள்ளிட்டாரும் பங்கேற்றனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, தவெக ஆச்சரிய இருந்தாலும் தற்குறியாக இருந்தாலும் எந்த குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களது குறி தேர்தல் குறி, யாரைக் கண்டும் அஞ்ச வேண்டியது கிடையாது எங்களுக்கு போட்டியும் கிடையாது. களத்தில் இருக்கக்கூடிய அனைவரையும் சமமாகத்தான் பார்க்கிறோம். அவர்கள் அனைவருமே அரசியல் எதிரிகள் தான் தனிப்பட்ட எந்த விரோதமும் அவர்களிடம் கிடையாது.
இதையும் படிங்க: விஜய் ஆச்சரியக்குறியோ… தற்குறியோ.. தேர்தல் மட்டுமே எங்கள் குறி..! அமைச்சர் ரகுபதி பதிலடி..!
தமிழ்நாட்டு மக்களை வாழவைக்க வேண்டும் என்று சொன்னால் திராவிட மாடல் ஆட்சி வந்தால் தான் முடியும் என்பதை இந்த ஐந்தாண்டுகளில் நிரூபித்துள்ளோம். சொன்னதை செய்துள்ளோம் செய்வதை தான் சொல்லியுள்ளோம். நாங்கள் பொய்யான வாக்குறுதிகள் கொடுப்பது கிடையாது. பலர் ஏமாற்று வேலைகளை செய்யலாம் எந்த ஏமாற்று வேலையும் தமிழ்நாடு மக்கள் மத்தியில் எடுபடாது.
ஆரம்பத்திலிருந்து பாஜக உடைய சி டீம் விஜய் என்று சொல்லியுள்ளேன். தவெக பாஜகவின் சி டீம். ஒரு காலத்தில் அவர்களது ஸ்லீப்பர் செல்களாக இருந்தவர்கள் இன்று அரசியல் களத்திற்கு வந்துள்ளனர். விஜய் தரக்குறைவாக பேசிக்கொண்டு தன்னைத்தானே மக்களிடத்தில் தரம் தாழ்த்தி வருகிறார். அதற்கு ஏன் நாங்கள் எதிர்வினை ஆற்ற வேண்டும். 2026 தேர்தலில் எந்த தாக்கத்தையும் யாராலும் ஏற்படுத்த முடியாது.
அனைவருமே முடிவு செய்து தான் தேர்தல் வாக்குறுதியை சொல்கிறோம். தேர்தல் அறிக்கை என்பது பலருடன் கூட்டாக விவாதித்து தருவதுதான் தேர்தல் அறிக்கை. கடந்த காலத்தில் நாங்கள் தந்த கலைஞர் டிவி தற்போது வரை ஓடிக்கொண்டிருக்கிறது நடுவில் ஃபேன் உள்ளிட்ட பொருட்களை கொடுத்தார்கள் அது காயெல்லாம் கடையிலேயே எடுத்துக்க மாட்டேன் என்று சொல்லக்கூடிய அளவில் தான் இருக்கிறது. நாங்கள் தரமான பொருட்களை தருகிற தரமான ஆட்சி எங்களது தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினின் ஆட்சி.
அறிவுத் திருவிழா என்பது தமிழர்களின் வரலாற்றை திராவிடத்தின் வரலாற்றை தற்போதுள்ள இளைய தலைமுறை அறிந்து கொள்வதற்காக நாங்கள் நடத்திய திருவிழாவை தவிர அவர்களுக்கெல்லாம் இது பற்றி புரிதல் கிடையாது அக்கறையும் கிடையாது. அவர்களது ஒரே எண்ணம் ஆட்சியை கைப்பற்றுவது ஆட்சிக்கு வந்து உட்கார வேண்டும் என்பதுதான். அதை தவிர தமிழர்களைப் பற்றியோ தமிழர்களின் கொள்கையை பற்றியோ பண்பாட்டைப் பற்றியோ கலாச்சாரத்தை பற்றியோ எதைப்பற்றியும் அவர்களுக்கு எந்தவிதமான கவலையும் கிடையாது.
காங்கிரஸில் இருந்து எங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை செய்ய குழு அமைத்துள்ளனர் அதற்குப் பிறகும் தவேக காங்கிரஸ் கூட்டணியா என்ற கேள்வியே தேவையில்லாத கேள்வி, சிண்டு முடியும் வேலைகளை செய்ய நினைத்தாலும் எடுபடாது. சீமான் மீது தவறி இருந்தால் அரசு நிச்சயம் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதல் தேர்தலிலேயே முதல்வர் ஆகணுமாம்.. இவ்வளவுதான் விஜய்..! டி.கே.எஸ் இளங்கோவன் பதிலடி...!