மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2026-27 பட்ஜெட் அறிவிப்புகளுக்குப் பிறகு, இந்தியப் பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த வீழ்ச்சியை முன்வைத்து, பிரதமர் மோடியின் "போலியான பட்ஜெட்" மற்றும் "தவறானப் பொருளாதாரக் கொள்கைகளே" இதற்குக் காரணம் என இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.

இன்று பட்ஜெட் உரை தொடங்கியபோது நேர்மறையாக இருந்த சந்தை, வரி தொடர்பான அறிவிப்புகள் வெளிவந்தவுடன் செங்குத்தாகச் சரிந்தது. மதியம் 12:30 மணியளவில் சென்செக்ஸ் (Sensex) சுமார் 1,600 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 80,619 புள்ளிகளாக வீழ்ந்தது. அதேபோல், நிஃப்டி 50 (Nifty 50) சுமார் 480 புள்ளிகள் சரிந்து 24,838 புள்ளிகளாக நிலவியது. பங்கு வர்த்தக வரி (STT) மற்றும் மூலதன லாப வரி (Capital Gains Tax) குறித்த அறிவிப்புகள் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தின. குறிப்பாக, ஃபியூச்சர்ஸ் (Futures) மீதான வரி 0.02%-லிருந்து 0.05%-ஆக உயர்த்தப்பட்டது வர்த்தகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: “மதுரையில் வெடித்தது கூட்டணி மோதல்!” - திமுக எம்.எல்.ஏ-விற்கு எதிராக காங்கிரஸ் சுவரொட்டி யுத்தம்!
பங்குச் சந்தை வீழ்ச்சியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் இந்த பட்ஜெட் வெறும் "புள்ளிவிவர மாயாஜாலம்" என்றும், நாட்டின் நிதர்சனமானப் பொருளாதாரச் சூழலைப் பிரதிபலிக்கவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். புதிய ஜிடிபி (GDP) மற்றும் பணவீக்கத் தரவுகள் வரும் வாரங்களில் வெளியாகவுள்ள நிலையில், பட்ஜெட்டில் வழங்கப்பட்டுள்ள எண்கள் நம்பகத்தன்மையற்றவை என மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சுட்டிக்காட்டியுள்ளார். சாமானிய மக்களின் வேலைவாய்ப்பு அல்லது விலைவாசி உயர்வு குறித்து எந்தவொரு ஆக்கப்பூர்வமானத் திட்டமும் இல்லாத "வெற்று அறிவிப்புகளால்" சந்தை நம்பிக்கை இழந்துள்ளதாக அக்கட்சி சாடியுள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற அடிப்படைப் பிரச்சனைகளுக்கு பட்ஜெட்டில் ஆக்கப்பூர்வமானத் தீர்வுகள் ஏதும் இல்லை என அவர் ஆதங்கப்பட்டார்.
இதையும் படிங்க: டெல்லியில் ராகுல் - கனிமொழி மீட்டிங்..!! காங்.-க்கு எத்தனை தொகுதிகள்..!! வெளியான முக்கிய தகவல்..!!