தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது. சுமார் 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்கு பதிவு பதிவானதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 2021 தேர்தலின் 73 சதவீதத்தை விட கணிசமாக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஓட்டைப் பதிவு செய்த காட்சிகள் பல இடங்களில் பதிவாகின. இந்த உயர் வாக்கு பதிவு திமுகவுக்கு சாதகமான சூழலை உருவாக்கியிருப்பதாக கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர்.முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் முடிவடைந்த சில மணி நேரங்களுக்குள் “தமிழ்நாடு வெல்லும்” என்று உறுதியுடன் கூறினார்.

அவர் மேலும், மக்களின் இந்த ஓட்டு ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் மற்றும் சமூக நீதி போன்ற அரசியலமைப்பின் உயர்ந்த மதிப்புகளைப் பாதுகாக்கும் கேடயமாக அமையும் என்றும் வலியுறுத்தினார். திமுக தலைவராகவும் முதலமைச்சராகவும் அவர் பல முறை “திராவிட மாடல் 2.0” அரசு மீண்டும் அமையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: நிலவரம் எப்படி இருக்கு..? திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..!
குறிப்பாக, 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற இலக்கை அவர் முன்வைத்திருந்தார். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி “தமிழ்நாடு vs டெல்லி” என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தது. இந்த நிலையில் மதுரை விமான நிலையத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தந்தார். அப்போது வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு வெற்றி வாய்ப்பு சூப்பராக இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துச் சென்றார். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும் என்பதில் தான் உறுதியோடு இருப்பதை எடுத்துக் கூறும் வகையில் தொடர்ந்து அவர் கருத்துக்களை எடுத்துரைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முடிவு எப்படி வரும்னு தெரியல..! வாக்கு செலுத்திய பின் மு.க. அழகிரி கருத்து..!