• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆடம்பரத்தைத் தவிர்த்திடுங்கள்... திமுகவினருக்கு ஸ்டாலின் போட்ட கட் அண்ட் கறார் உத்தரவு... விடித்ததுமே அதிரடி...!!

    பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் ஆடம்பரத்தை தவிர்க்கும் படியும், அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான பிரசார பணிகளை மேற்கொள்ளும் படியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். 
    Author By Amaravathi Fri, 27 Feb 2026 09:33:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MK Stalin advice to avoid-extravagance-during-birthday-celebrations

    தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 73வது பிறந்தநாள் வரும் மார்ச் 1ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஸ்டாலினின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் ஆடம்பரத்தை தவிர்க்கும் படியும், அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான பிரசார பணிகளை மேற்கொள்ளும் படியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். 

    இதுகுறித்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளதாவது: ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! ஆக்கப்பூர்வமான பிரசாரப் பணியினை அமைதியாக மேற்கொள்வீர்!

    கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

    தலைவர் கலைஞர் - அன்னை தயாளு அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்து; பொதுவுடைமைப் பூமியாம் சோவியத் நாட்டின் சுடரொளி ஸ்டாலின் அவர்களின் பெயர் சூட்டப்பட்டு, கொள்கைக் கோட்டமாம் கோபாலபுரத்தில் வளர்ந்து, இளமையிலேயே இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு, திராவிட இயக்கத்தை நோக்கி இளைஞர்களைத் திரட்டிடும் இனிய பணியைச் சுமந்து, கடந்து வந்த மேடு - பள்ளங்களைச் சமமாகப் பாவித்து ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டு; தலைவர் கலைஞர் அவர்களிடம் பயின்ற பண்புகளோடும், கடமை உணர்வோடும் கழகத்தைக் கண்களாகவும் தலைவர் கலைஞர் அவர்களை கதிரொளியாகவும் கொண்டு, என்னால் இயன்றவரை எல்லோருக்கும் பயனுள்ள வகையில், கனிவு - துணிவு ஆகியவற்றைத் துணையாகக் கொண்டு, தொண்டூழியம் ஆற்றி வரும் எனக்கு மார்ச்-1 அன்று 73-ஆவது பிறந்தநாள்! 1-3-2026 அன்று எனது பிறந்தநாளையொட்டி ஆர்வம் மிகுதியால், கண்ணுறுத்தும் படாடோப விளம்பரங்களைக் கட்டாயம் தவிர்த்து, அனுமதிக்கப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும். உற்சாகமும் உத்வேகமும் எல்லை மீறிப் போக அனுமதித்திடக் கூடாது.

    இதையும் படிங்க: நல்லக்கண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம்... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...!!

    பிறந்தநாளையொட்டி, சமுதாயத்தில் மெலிந்து நலிந்த பிரிவினரான ஏழை எளிய மகளிர், முதியோர், ஆதரவற்றோர், திருநர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் நலன் பேணும் வகையில் இயன்ற உதவிகளைச் செய்வது; கழகக் கொடிகளைப் புதுப்பிப்பது - புதிய கொடிகளை ஏற்றி வைப்பது - கிளைக் கழகங்களின் பெயர்ப் பலகைகளைப் புதுப்பிப்பது – பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் பெயர்களில் அமைந்துள்ள படிப்பகங்களுக்குப் பயனுள்ள புதிய நூல்களை வழங்குவது - கழகத்தின் மூத்த உறுப்பினர்களைச் சிறப்பிப்பது, பெருவாரியாக இரத்தத் தானம் செய்வது போன்றவற்றை ஆற்றுவதுமே அவசியமானவை. இயக்கத்திற்கு ஆக்கமளித்திடும் இத்தகைய செயல்பாடுகளை மட்டுமே நான் பெரிதும் வரவேற்கிறேன்; சமூக உணர்வும், இயக்கப் பற்றும் மிளிரும் இத்தகைய நற்செயல்கள் எல்லா இடங்களிலும் நிகழுமானால், அவற்றையே என்னரும் தோழர்களின் இதய வாழ்த்துகளாகக் கொண்டு பெருமகிழ்ச்சி கொள்வேன்!

    இன்று முதல் நமது நிலையும் நினைப்பும் எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலையே மையம் கொண்டதாக இருந்திட வேண்டும். நாட்கள் இருக்கிறதே - என்ன அவசரம் என்று எண்ணிடாமல், இப்போதிருந்தே தேர்தல் பணிகளைத் திட்டமிட்டுத் தொய்வின்றித் தொடர்ந்திட வேண்டும். நமது திராவிட மாடல் அரசின் திட்டங்களால் "ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற குரல் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. எனவே, ஏழாவது முறையும் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிட உங்களது உழைப்பு அமைந்திட வேண்டும்! அதுவே எனக்கு நீங்கள் வழங்கிடும் சிறந்த பிறந்தநாள் வாழ்த்து! ஆடம்பரத்தைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான பணிகளை அமைதியாக மேற்கொள்வீர்! இந்த எனது அன்பு வேண்டுகோளை எல்லோரும் நினைவில் கொள்வீர்! என வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: வாய்க்கு வந்தபடி வடை சுடும் EPS... டப்பா என்ஜினை நம்பி அதிமுக..! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..!!

    மேலும் படிங்க
    காமவெறி மிருகங்களை வளர்த்து விடும் அறிவாலயம்... 2 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... கொந்தளித்த நயினார்..!!

    காமவெறி மிருகங்களை வளர்த்து விடும் அறிவாலயம்... 2 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... கொந்தளித்த நயினார்..!!

    தமிழ்நாடு
    3 தேதிகள் குறித்துக் கொடுத்த ராகுல்காந்தி!!  அத்தனையும் வேஸ்ட்! காங்., மாநாடு தள்ளிப்போகும் காரணம்?!

    3 தேதிகள் குறித்துக் கொடுத்த ராகுல்காந்தி!! அத்தனையும் வேஸ்ட்! காங்., மாநாடு தள்ளிப்போகும் காரணம்?!

    அரசியல்
    மறைந்தும் 7 பேருக்கு வாழ்வளித்த சிறுமி... வெண்பா வீட்டுக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்..!!

    மறைந்தும் 7 பேருக்கு வாழ்வளித்த சிறுமி... வெண்பா வீட்டுக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்..!!

    தமிழ்நாடு
    திமுகவில் இணைந்தது வெட்கக்கேடான செயல்.. சுயநலத்தின் மொத்த உருவம் ஓபிஎஸ்..!! கே.பி முனுசாமி சாடல்..!!

    திமுகவில் இணைந்தது வெட்கக்கேடான செயல்.. சுயநலத்தின் மொத்த உருவம் ஓபிஎஸ்..!! கே.பி முனுசாமி சாடல்..!!

    தமிழ்நாடு
    செம்ம வைரல்...!! - இபிஎஸ் வாயை வாடகைக்கு எடுத்த திமுக ஐ.டி. விங்... தீயாய் பரவும் தேர்தல் பிரசார வீடியோ....!

    செம்ம வைரல்...!! - இபிஎஸ் வாயை வாடகைக்கு எடுத்த திமுக ஐ.டி. விங்... தீயாய் பரவும் தேர்தல் பிரசார வீடியோ....!

    அரசியல்
    போலீஸ் யூனிபார்மில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்?! டெல்லியை உலுக்கிய போலி ரெய்டு! பலே கொள்ளையர்கள்!!

    போலீஸ் யூனிபார்மில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்?! டெல்லியை உலுக்கிய போலி ரெய்டு! பலே கொள்ளையர்கள்!!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share