தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும் முதலமைச்சர் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அப்போது கரூர் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்தார். கரூர் மாவட்டத்தில் அதிகாரிகள் மற்றும் போலீசாரென 606 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவித்தார். 517 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்ததாகவும், காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். தமிழக வெற்றி கழக கூட்டத்திற்கு அதிக பாதுகாப்பு செய்யப்பட்டதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தேவையான ஏற்பாடுகளை செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார்.
கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் அருகே விஜயை பின்தொடர்ந்து வந்ததாகவும் கூட்ட நெரிசல் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு முன்கூட்டியே எச்சரித்ததாகவும் தெரிவித்தார். காவல்துறையின் எச்சரிக்கையும் மீறி பிரச்சார வாகனம் முன்னோக்கி சென்றதாக கூறினார்.

3 மணி முதல் 10 மணி வரை விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்கப்பட்டதாகவும் ஆனால் 12 மணிக்கு விஜய் வருவார் என பொதுச்செயலாளர் சமூக வலைதளங்கள் வாயிலாக கூறியதாகவும் அதனால் காலை முதலே கரூரில் கூட்டம் நெரிசல் அதிக அளவில் இருந்ததாகவும் கூறினார். ஆனால் விஜய் 7 மணி நேரம் தாமதமாக தான் வந்தார். என்று குறிப்பிட்டார். கூட்டம் நடத்தும் கட்சிகள் பொறுப்போடு செயல்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ஆட்டம் ஆரம்பம்! கரூர் சம்பவம் இனி சிபிஐ வசம்... ஆவணங்கள் அனைத்தும் ஒப்படைப்பு...!
தாமதம் தான் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்றும் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை கொடுப்பதற்காக சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். கரூர் பேருந்து உயரத்தில் காயமடைந்தவர்கள் தற்போது குணமடைந்துவிட்டதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: தவெக கொடி பறக்குதா? - ஜனார்த்தனனை தூக்கியடித்த ஜெயலலிதா... எடப்பாடி மறந்த பீதி கிளப்பும் பிளாஷ்பேக்...!