தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பல குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் குறைந்து இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தார். புள்ளி விபரங்களை சுட்டிக்காட்டி முதல்வர் உரையாற்றினார். தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்றத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள பேரவை மண்டபத்தில் தொடங்கியது. இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் ரவி தனது உரையை நிகழ்த்துவார் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் அது ஏமாற்றத்தில் தான் முடிந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை கூடிய நிலையில் நான்காவது ஆண்டாக ஆளுநர் உரையை படிக்காமல் வெளிநடப்பு செய்தார். இதைத்தொடர்ந்து அதிமுகவினரும் வெளிநடப்பு செய்திருந்தனர். இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையின் 5 ஆம் நாள் கூட்டம் இன்று நடந்தது. தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். தேசபக்தி குறித்து பாடம் எடுக்கும் அளவிற்கு அவர்கள் போராடியவர்கள் அல்ல என்றும் தன்னை சீண்டி பார்ப்பவர்கள் மகிழ்ச்சியடையலாம் ஆனால் தன்னை எதுவும் செய்ய முடியாது எனவும் தெரிவித்தார். நாட்டிலேயே உயரிய பொருளாதாரம் வளர்ச்சியை தமிழகம் எட்டு இருப்பதாகவும் அரசு தயாரித்த உரையை ஆளுநர் படிக்காமல் சென்றது மக்களாட்சிக்கு விடப்பட்ட சவால் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பகுதி நேர ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! சட்டசபையில் வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்..!
அதிமுக ஆட்சியை ஒப்பிடும்போது குற்றச்செயல்கள் குறைந்துள்ளது புள்ளி விபரங்கள் கூறுவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். அதிக சுற்றுலாப் பயணிகள் வந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆளுநரின் பார்வை தான் பழுதுபட்ட பார்வையாக இருக்கிறது என்று விமர்சித்தார். தமிழகத்தில் மது சண்டை, ஜாதி சண்டை, கும்பல் வன்முறை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சாதனைக்கு மேல் சாதனை..! 2.0 திராவிட மாடல் அசரவைக்கும்..! பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி..!