2026 பொங்கல் பண்டிகை களைக்கட்டி உள்ளது. அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என பல இடங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்படுகிறது. சென்னை கொளத்தூரில் நடைபெறும் பொங்கல் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். அனிதா அச்சிவர்ஸ் அகாடமி சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் முதலமைச்சர். ஸ்டாலின் பங்கேற்று சிறப்பித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலினும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் நடைபெறும் நிகழ்சியில் பங்கேற்கும் போது எனர்ஜி வருவதாக தெரிவித்தார். ஒரு டீ குடித்து விட்டு திமுக காரங்க வேலை செய்வாங்க., அதுபோல நம்மளால முடியாது என்று கூறுவார்கள் என தெரிவித்தார்.

தேர்தல் காலத்தில் திமுகவினரை போல் யாரும் வேலை செய்ய முடியாது என பாஜகவினரே புகழ்வதாக தெரிவித்தார். தேர்தல் களத்தில் நாம் ஆற்ற வேண்டிய பணியில் இன்னும் 50 சதவீதம் பாக்கி உள்ளது என்றும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொளத்தூரில் களைக்கட்டிய பொங்கல் விழா... சிலம்பம் சுற்றி அசத்திய முதல்வர் ஸ்டாலின்...!
200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என ஏற்கனவே கூறியிருப்பதாகவும், ஆனால் கொளத்தூர் தொகுதி மட்டுமல்லாது அனைத்து தொகுதிகளிலும் உள்ள திமுகவினர் பணியாற்றுவதை பார்க்கும் போது, தேர்தலில் 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளான பொங்கலை எழுச்சியுடன் கொண்டாடி வருகிறோம் என கூறிய முதல்வர் ஸ்டாலின், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: பார்த்து பேசுங்கய்யா..! யார் எழுதி கொடுத்தாலும் அப்டியே பேசுவீங்களா முதல்வரே? கிண்டலடித்த அண்ணாமலை...!