தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இரு நாள் புத்தாக்கப் பயிற்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் இரண்டு நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்று நிறைவு பெற்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பாலான எம்எல்ஏக்கள் முதல் முறையாக சட்டசபைக்கு வரும் நிலையில், அவர்களுக்கு சட்டப்பேரவை நடைமுறைகள், அவை மரபுகள் மற்றும் அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்த விரிவான புரிதலை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் (நேற்று) ஜூன் 16-ம் தேதி குத்துவிளக்கேற்றி பயிற்சியை தொடங்கி வைத்தார். சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். சபாநாயகர் பேசுகையில், தற்போதைய சட்டசபையில் 146 எம்எல்ஏக்கள் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதையும், பலர் இளம் வயதினர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பயிற்சி மூலம் அவர்கள் சட்டசபையில் என்ன பேச வேண்டும், என்ன பேசக் கூடாது, கேள்விகள் எவ்வாறு எழுப்ப வேண்டும், அறிவிப்புகள் தாக்கல் செய்யும் முறை உள்ளிட்டவற்றை தெளிவாக அறிந்துகொள்ள முடியும் என்று வலியுறுத்தினார். முதல் நாள் அமர்வுகளில் சட்டசபை நடைமுறை விதிகள், கேள்விகள் எழுப்புதல், அறிவிப்புகள் சமர்ப்பித்தல் போன்ற அடிப்படை விஷயங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க: அரசியலில் புதுமுகங்கள்... MLA- களுக்கு SPECIAL TRAINING..! தொடங்கி வைத்த முதல்வர் விஜய்..!!
முன்னாள் சட்டசபை செயலாளர்கள் மற்றும் அனுபவம் மிக்க அதிகாரிகள் பயிற்சியாளர்களாக செயல்பட்டனர். இரண்டாவது நாளான ஜூன் 17-ல் அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்த விரிவான அமர்வுகள் நடைபெற்றன. இந்தப் பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை இரு நாட்களும் தொடர்ந்தது. இந்தப் பயிற்சியை தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்கும் கட்சிகளான காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் பெருமளவில் பங்கேற்றனர். புத்தாக்க பயிற்சியின் நிறைவு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் கலந்து கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!