200 கோடி மக்களை உள்ளடக்கிய இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது உலக வர்த்தக வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. இந்தியா-ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் இந்த ஒப்பந்தத்தின் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி இதனை அனைத்து ஒப்பந்தங்களின் தாய் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தம் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 2007-ஆம் ஆண்டு தொடங்கிய பேச்சுகள் 2013-இல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பின்னர் 2022-இல் மீண்டும் தொடங்கப்பட்டு, 2025 அக்டோபர் மாதத்தில் இறுதிக் கட்ட பேச்சுகளுடன் முன்னேறியது. இறுதியாக 2026 ஜனவரி 26 அல்லது 27 அன்று ஒப்பந்தத்தின் உரை முடிவடைந்து கையெழுத்து நடைமுறைக்கு வந்தது.

இதனிடையே, நம் இந்திய நாட்டிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம் குறித்து, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சார்ந்த பல்வேறு வர்த்தக மற்றும் தொழில் பிரதிநிதிகள் என்னைத் தொடர்பு கொண்டு, இந்த வர்த்தக ஒப்பந்தம் தங்களுக்கு எத்தகைய நன்மைகளை பயக்கவுள்ளது என்பதை விளக்கி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்ததாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ்-ஐ கூட சேர்க்கலாமா? வேணாமா? உளவுத்துறை கொடுத்த அறிக்கை! திமுக மாஸ்டர் ப்ளான்!
தொடர்ந்து இதுபோன்ற நல்ல திட்டங்களை மத்திய பாஜக அரசு சார்பிலும், விரைவில் தமிழ்நாட்டில் அமையவுள்ள அதிமுக அரசு சார்பிலும் அளித்திட தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இத்தருணத்தில், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த வர்த்தக ஒப்பந்தத்தை சாத்தியப்படுத்திய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
இதையும் படிங்க: விறு விறு அரசியல்... கள நிலவரம் என்ன? அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு..!