மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில், உலக ஆடியோ விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு (WAVES) 2025 ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதுபோன்ற ஒரு உச்சி மாநாடு இந்தியாவில் நடப்பது இதுவே முதல் முறை. ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு துறையில் உலகளாவிய அளவில் ஒரு தனிநபரை உருவாக்கும் இந்தியாவின் உந்துதலில் இது ஒரு முக்கிய மைல்கல் என கூறப்படுகிறது. நான்கு நாள் நடைபெறும் இந்த நிகழ்வில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கிரியேட்டர்கள், கண்டுபிடிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக இந்தியா உள்ளது என பெருமிதம் தெரிவித்தார். ரஷ்யாவில் ராஜ்கபூர், கேன்சில் சத்யஜித் ராய், ஆஸ்கரின் RRRக்கு கிடைத்த பெருமையை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பேசினார். மேலும், இந்தியாவிலிருந்து உலகிற்கான உருவாக்கத்திற்கு இதுவே தகுந்த நேரம் என்றும் வரும் ஆண்டுகளில் படைப்பாற்றல் பொருளாதார இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பை அதிகரிக்கும் என்று கூறினார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் திமுகவை வீழ்த்தி தே.ஜ.கூ. ஜெயிக்கணும்.. எல்லோரும் ஓரணியில் இணையணும்.. இது நயினார் அழைப்பு!

தொடர்ந்து பேசிய அவர், திரைப்பட தயாரிப்பு, கேமிங், பேஷன், இசை நிகழ்ச்சிகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியா வளர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிப்பின் பின்னணியில் உள்ள அரசியல்.. புட்டுப்புட்டு வைத்த திருமாவளவன்!