மரங்களை வெட்டி எடுத்துச் செல்லும் விதிகளை தளர்த்தும் வகையில் புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசிய ஒரு முக்கியமான விஷயம், விவசாய நிலங்களில் மரங்களை வளர்ப்பதற்கும், அவற்றை அகற்றுவதற்கும் தொடர்பான புதிய அணுகுமுறை பற்றியதாகும்.
குறிப்பாக, விவசாயிகள் தங்கள் நிலங்களில் வணிக ரீதியில் மதிப்புமிக்க மரங்களான சந்தனம், செிவப்பு சந்தனம், மஹாகனி, ரோஸ்வுட் போன்றவற்றை வளர்க்க ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அக்ரோஃபாரஸ்ட்ரி கொள்கை அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்பதை அவர் தெளிவாக விளக்கினார். இந்தக் கொள்கை மூலம், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வழி செய்யப்படும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

மரங்கள் பயிர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவும், மழை பெய்ய உதவும், மண்ணின் வளத்தை மேம்படுத்தும் என்பதால், இத்தகைய மரங்களை விவசாய நிலங்களோடு இணைத்து வளர்ப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். தற்போது வனத்துறை விதிகள் மிகவும் கடுமையாக இருப்பதால், விவசாயிகள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: ஹாப்பி நியூஸ்..! வேளாண் பட்ஜெட்... இளைஞர்களை ஊக்குவிக்க மானியம்...! சட்டப்பேரவையில் அறிவிப்பு..!
அதனால், மரங்களை பதிவு செய்தல், வெட்டுதல், கொண்டு செல்லுதல், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் உள்ள சிக்கல்களை எளிமையாக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதன்மூலம், பசுமையான தமிழ்நாட்டை உருவாக்குவதோடு, விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஆகிய இரட்டை நோக்கங்களை அடைய முடியும் என்பதுதான் அமைச்சரின் பேச்சின் மையக் கருத்தாக இருந்தது.
இதையும் படிங்க: வடக்க உள்ளவன் டேபிள் தொடைக்க வரான்...! வெறுப்புணர்வு... அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேச்சால் கொந்தளித்த நயினார்..!