பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் என்பது உலகெங்கிலும் நிலவும் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினை. இது பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் மனித மாண்பை மீறும் ஒரு கடுமையான குற்றம். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன, இது சமூகத்தில் ஆழமான வேர் ஊன்றியுள்ள பாலின சமத்துவமின்மை, ஆணாதிக்க மனோபாவம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பிரதிபலிக்கிறது.
இது பொது இடங்களில், பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில், வீடுகளில், மற்றும் ஆன்லைன் தளங்களில் கூட நிகழ்கிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலியல் தொல்லை பெரும் சமூக பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

சென்னை பல்லாவரம் அருகே அனகாபுத்தூரில் மருமகளுக்கு மாமனாரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை மருமகள் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். கணவர் இறந்து விட்ட நிலையில் தனியாக இருந்த மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இரு கைகளும் அறுக்கப்பட்டு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண் சடலம் மீட்பு; கணவரிடம் போலீஸ் தீவிர விசாரணை!
கணவர் மணிகண்டன் மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் தனியாக இருந்த 28 வயது மருமகளுக்கு மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. எனவே மாமனார் பெருமாளை காய்கறி நறுக்கும் கத்தியால் இளம் மருமகள் குத்தி கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்றபோது சார் சடலத்தை கைப்பற்றியதுடன் மருமகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ரத்தம் தெறிக்க, தெறிக்க கொடூரம்.. ஜாமீனில் வெளியே வந்த இளைஞர் சரமாரியாக வெட்டி சாய்ப்பு...!