தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி கடந்த பத்தாம் தேதி தனது வீட்டிலிருந்து இரவு ஏழு மணி அளவில் வீட்டு அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக்கு சென்றுள்ளார் பின்னர் மாணவி வீடு திரும்பவில்லை. இதை தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் மாணவியின் பெற்றோர் கிராமம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் தீவிரமாக தேடினர். இருப்பினும் மாணவி கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி வேடநத்தம் கிராம காட்டுப் பகுதியில் மாணவியின் உடல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பல்வேறு இடங்களில் காயத்துடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த கொலை வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் தலைமையில் நான்கு டிஎஸ்பிக்கள் தலைமையில் 10 தனி படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையின் அனைத்து தரப்புகளும் முடக்கிவிடப்பட்டு விசாரணை நடைபெற்றது. ஆனால் ஒன்பது நாட்கள் ஆகியும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படாமல் காவல்துறையினர் திணறி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தது தூத்துக்குடி ராஜபாண்டி நகர் பகுதியை சேர்ந்த மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்டுள்ள தர்ம முனீஸ்வரன் மீது ஏற்கனவே 24 வழக்குகள் உள்ளன. இதில் கடந்த 2020 ஆம் ஆண்டு எட்டையாபுரம் அருகே மூதாட்டி ஒருவரை கொடூரமாக பாலியல் வன்புணர்வு கொலை செய்து நகையை திருடிய வழக்கில் தர்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்ற சிறையில் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் வாங்கி வெழியே வந்து கஞ்சா, மதுபோதையில் சுற்றி திரிந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீருனுக்காக தினமும் கையெழுத்து இட்டுள்ளார்.
இதையும் படிங்க: சரித்திர பதிவேடு குற்றவாளி வெளியில் சுத்துற அளவுக்கு மெத்தனம்..! கேள்விகளால் துளைத்த அண்ணாமலை..!!
தர்ம முனீஸ்வரன் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து காட்டுப் பகுதியில் வீசி விட்டு சர்வ சாதாரணமாக சுற்றி திரிந்துள்ளார். மேலும் நீதிமன்றத்திலும் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்துள்ளார். இந்த நிலையில் காற்றாடி சிசிடிவி காட்சிகள் மூலம் இந்த கொலையில் ஈடுபட்டது தர்ம முனீஸ்வரன் என்பது ஊர்ஜிதம் ஆனது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் தர்ம முனீஸ்வரனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தர்ம முனீஸ்வரனை காவல்துறை கைது செய்து தொடர்ந்து 9 நாட்களாக உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவியர் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வந்து அங்கு பிணவறையில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட மாணவியின் உடலை பெற்றுக் கொண்டு சொந்த ஊருக்கு வேடநத்தம் கிராமத்திற்கு சென்றனர். பின்னர் அங்கு மாணவியின் உடல் கிராம மக்கள் அஞ்சலிக்கு பின்பு அடக்கம் செய்யப்பட உள்ளது.
இதையும் படிங்க: மாணவி கொலை... ஜாமினில் வந்து செய்த கொடூரம்..! பதற வைக்கும் குற்றவாளியின் பழைய வழக்குகள்..!!