இன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தினம். இதை முன்னிட்டு இன்று செங்கோட்டையில் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி 13வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார். செங்கோட்டையில் சுதந்திர தினம் கொண்டாட்டம் வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியது.
"இன்று ஒவ்வொரு இதயமும் 'வந்தே மாதரம்' எனும் தாளகதியில் துடிக்கிறது. இன்று ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி உள்ளது; ஒவ்வொரு மனதிலும் மூவர்ணக் கொடி உள்ளது.
இந்தச் சுதந்திர தினத்தன்று, மகாத்மா காந்தி மற்றும் அனைத்துச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் புரட்சியாளர்களுக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
இதையும் படிங்க: #BREAKING சுதந்திர தினத்தில் ஒலித்த ‘வந்தே மாதரம்’... செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி...!
இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். சுதந்திரத்திற்குப் பிறகு, செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து 'வந்தே மாதரம்' முழக்கம் எதிரொலித்த தருணம் இதுவாகும்.
இன்று இந்த விழாவில் கலந்துகொண்டுள்ள அனைவருக்கும் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். சுதந்திரம் பெற்றதிலிருந்து முதன்முறையாக, ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று செங்கோட்டையில் 'வந்தே மாதரம்' முழக்கம் எதிரொலிக்கிறது.
புதிய உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டு, தேசமானது உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் முன்னேறிச் செல்கிறது. கடந்த சில நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு பலரைப் பாதித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ஒட்டுமொத்த நாடும் அவர்களுடன் துணை நிற்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்." என்றார்.
தேசத்தின் அனைத்து பிரிவு மக்களும் நாட்டை முன்னேற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்தியர்களாகிய நமது கனவுகளை தடுத்து நிறுத்துவது சாத்தியமற்றது. இந்தியா தற்சார்பு அடைய வேண்டியது காலத்தின் கட்டாயம்
நமது தேவைகளுக்காக பிற நாடுகளை எப்போதும் சார்ந்திருக்க முடியாது. இந்தியாவில் மிகப்பெரிய செமி கண்டக்டர் ஆலைகள் வர உள்ளன என்றார்.
அப்போது, “சிறிய கனவுகள் இனி போதாது. நாம் பெரிய கனவுகளைக் காண வேண்டும். பெரிய கனவுகள் நமது சிந்தனையை விரிவுபடுத்தி, சிந்தனையின் எல்லைகளை அகலப்படுத்துகின்றன” என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தியாவை 2047-க்குள் வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கையும் தனது உரையில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
“2047 ஆம் ஆண்டில் 100வது சுதந்திர தினத்தை நாம் எட்டும்போது, இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும்.
இந்த கனவை நாம் அடைந்தே தீர வேண்டும். கடந்த 12 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர். வளர்ச்சியை நோக்கிச் செல்லும் 140 கோடி இந்தியர்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.”
“கடந்த நூற்றாண்டின் பழைய சட்டங்களை வைத்துக்கொண்டு, 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவால் வேகமாக முன்னேற முடியாது என்றார்.
இதையும் படிங்க: சுதந்திர தின கொண்டாட்டம் எதிரொலி..! தேநீர் விருந்து ரத்து... ஆளுநர் மாளிகை அறிவிப்பு..!!