தமிழக அரசியலில் பரபரப்பான நிலை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் அனைத்து சமூக மக்களின் ஓட்டுகளை பெறும் முயற்சியில் அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. அந்த வகையில் முத்தரையர் ஓட்டு யாருக்கு செல்கிறது என்பதில் அனைவரின் கவனமும் திரும்பி உள்ளது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் குறிப்பாக தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, பெரம்பலூர் பகுதிகளில் முத்தரையர் சமுதாய மக்கள் அரசியல் வாக்குகளில் முக்கிய சக்தியாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 30 சட்டசபை தொகுதிகளில் யார் வெற்றி பெறுவார் என்பதை தீர்மானிக்கும் அளவுக்கு முத்தரையர் வாக்குகள் எடுப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தஞ்சாவூர் மக்களவை தொகுதிகளில் மட்டும் 5.38 38 லட்சம் வாக்குகள் முத்தரையர் சமூகத்திற்கு உள்ளதாக தெரிகிறது. இதேபோல் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, வேலூர் பகுதிகளிலும் முத்தரையர் வாக்கு கணிசமாக உள்ளது. எம்ஜிஆர் காலத்தில் முத்தரையர் வாக்குகள் அப்படியே லட்டு போல அதிமுகவு போய்விடுமாம். அந்த அளவுக்கு எம்ஜிஆர் மீது முத்தரையர் சமூகம் பிரியமாக இருந்துள்ளது. பிறகு வந்த ஜெயலலிதா சமூகத்தினரின் ஆதரவை சிந்தாமல் சிதறாமல் அதிமுகவிற்கு தக்கவைத்து கட்சியின் வெற்றிக்கு அடித்தளமாக்கினார். ஜெயலலிதா காலத்திலும் முத்தரையர் சமூக அதிமுகவிற்கு ஆதரவாகவே இருந்தது. பின் அதிமுக பிளவு காரணமாக ஓட்டுக்கள் சிதறியது. இப்படிப்பட்ட சூழலில் உளவுத்துறை மற்றும் தனியார் ஏஜென்சிகள் சமீபத்தில் சர்வேக்களை எடுத்துள்ளன. அதிமுகவுக்கு 40 சதவீதம் முதல் 45 சதவீதமும், திமுகாவுக்கு 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையிலும், பாஜகவுக்கு 10 சதவீதமும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு 7 சதவீதமும், நாம் தமிழர் கட்சிக்கு 3 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது அதிமுக தரப்புக்கு குஷியை தந்துள்ளது. இந்தநிலையில்தான் பெரும் பிடுகு முத்தரையருக்கு மத்திய அரசு சார்பில் தபால் தலை வெளியிடப்பட்டது. இது அந்த சமுதாய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதில்தான் திமுகவுக்கு பெரிய இடியை இறக்கி உள்ளது. ஏனென்றால் 15 ஆண்டுகளாக காங்கிரஸ் மத்தியில் இருக்கும்போது எதையும் செய்யாமல் தற்போது பாஜக ஆட்சியில் தபால் தலை வெளியிட்டுள்ளதை பாராட்ட முடியாமல் தவித்து வருகிறது. பாராட்டினால் அது பாஜகவுக்கு மேலும் மைலேஜ் கொடுக்கும் என்பதால் அமைதி காத்து வருகிறது.
இதையும் படிங்க: ஆட்டத்தை தொடங்கிய பாஜக... EPS உடன் பியூஷ் கோயல் நாளை அதிமுக்கிய ஆலோசனை...!
தபால் தலை வெளியிட்டு தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பேரரசர் இரண்டாம்பெரும்பிடுகு முத்தரையரை கௌரவிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆற்றல்மிக்க நிர்வாகியான அவருக்கு போற்றத்தக்க தொலைநோக்கு பார்வையும், முன்னுணரும் திறனும், போர்தந்திர ஞானமும் இருந்தன. நீதியை நிலைநாட்டுவதில் அவர் உறுதியுடன் செயல்பட்டவர். அதேபோல தமிழ் கலாச்சாரத்திற்கும் அவர் ஒரு மகத்தான பாதுகாவளராக இருந்தார். அவரது அசாதாரண வாழ்க்கையை பற்றி அதிகமான இளைஞர்கள் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி பெரும்பாலும் சமூக அரசியலை மேற்கொண்டதில்லை. சுதந்திர போராட்ட வீரர்கள் தேசத்திற்காக போராடிய தலைவர்கள் வரலாற்றில் மறைக்கப்பட்ட தலைவர்களை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதிதான் பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரை வெளிக்கொண்டு வந்துள்ளது. வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் முத்தரையர் ஓட்டுகள் பெரும்பாலும் அதிமுகவிற்கு மாறும் வாய்ப்பு அதிகம் என்று சர்வே முதல் நிபுணர்கள் வரை அனைவரும் கூறுகிறார்கள். இதனால் இந்த தொகுதிகளில் திமுக வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கொங்கு மண்டலத்தில் தவெக டெபாசிட் இழக்கும்... இன்னொரு மநீம அவ்ளோ தான்... அர்ஜுன் சம்பத் உறுதி...!