சென்னை தலைமைச் செயலக நுழைவு வாயில் அருகே புதிய பேருந்து சேவையை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். 300 புதிய அரசு பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்திருக்கிறார். விளம்பர மோகத்தால் மக்கள் பணத்தை ஜோசப் விஜய் அரசு வீணடிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
முதல்வர் விஜய் பிறந்தநாளன்று 300 அரசுப் பேருந்துகளின் துவக்க விழாவை திட்டமிட்டிருந்த தவெக அரசு, பிறந்தநாள் முடிந்து இரண்டு நாட்களாகியும் துவக்க விழாவை நடத்தாததால், புதிய பேருந்துகள் சென்னையிலேயே நிற்பதாக வெளியாகிய செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். 300 பேருந்துகளையும் ட்ரோன் ஷாட் எடுக்கும் மோகத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துக்கு 40,000 ரூபாய் வீதம் செலவழித்து தலைநகருக்கு கொண்டு வந்த ரீல்ஸ் மாடல் அரசின் பேராசையால் மக்கள் பணம் 1 கோடி ரூபாய் இன்று வீணாகியிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகளே எரிபொருள் தட்டுப்பாட்டில் தவிக்கும் வேளையில் இப்படி ஒரு விளம்பர ஷூட்டிங் தேவையா? அதிலும், கடனில் தமிழகம் மிதக்கும் வேளையில், இப்படி வரிப்பணத்தை வீணாக்கலாமா? என்று நயினார் சாடினா.
இதையும் படிங்க: ஒரே நாளில் 10 பாலியல் கொடூரங்கள்... என்ன CM சார்..? ஏதாச்சும் பேசுங்க... நயினார் ஆவேசம்..!!
"மக்கள் பணத்தை தொட மாட்டோம்.. தொடவிடவும் மாட்டோம்" என்று கூறிய முதல்வர் ஜோசப் விஜய், பஞ்ச் வசனங்களை பேசுவதை விடுத்து, செயலில் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். உடனடியாக புதிய பேருந்துகளை அந்தந்த பணி முனையங்களுக்கு அனுப்பி இயக்க உத்தரவிடுவதோடு, இது போன்ற வீண் விளம்பர செலவினங்கள் இனியும் நேராதிருக்க உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: தவிக்கும் விவசாயிகள்... தவெக அரசின் வஞ்சனை..! நயினார் கண்டனம்.!