தமிழக வெற்றி கழக நிர்வாகிகளால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தனது கட்சி நிர்வாகிகளிடம் இருந்து பெண்களைக் காக்க எந்தப் படையை முதல்வர் விஜய் அமைக்கப் போகிறார் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
கட்சியில் பதவி வாங்கித் தருவதாகக் கூறி தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தனது பெண் குழந்தையையும் பாலியல் ரீதியாக விமர்சித்ததாகவும் தவெகவின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது, இளம்பெண் ஒருவர் அளித்துள்ள புகார்கள் கடும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

அதுமட்டுமன்றி, பாதிக்கப்பட்ட பெண் பலமுறை புகார் அளித்தும் கூட, இதுவரை விஜய் மோகன் கைது செய்யப்படவில்லை என்று வெளியாகியுள்ள தகவல், தமிழகக் காவல்துறையின் நேர்மையின் மீதும், அதை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்வரின் நிர்வாகத் திறன் மீதும் கடும் சந்தேகத்தை எழுப்புகிறது என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஓயாத கொளத்தூர் தொகுதி பிரச்சனை..! வாக்கு எந்திரங்கள் ஆய்வு...!! ஸ்டாலின் மனுவால் அதிரடி திருப்பம்..!
எனவே, தனது சொந்தக் கட்சிக்குள் இத்தனை காமுகர்களை பாதுகாத்து வைத்துக் கொண்டு, பெண்களின் பாதுகாப்பைப் பற்றி பக்கம் பக்கமாக வசனம் பேசுவதில் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை என்பதை முதல்வர் ஜோசப் விஜய் உணர வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி இருக்கிறார். பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய தவெக நிர்வாகி விஜய் மோகன் மீது உடனடியாக சட்டரீதியான மற்றும் கட்சி ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே சி.எம். விஜய் வெளியிட்ட குட்நியூஸ்... இளம் பெண்களுக்கு ரூ.7,000 கோடிக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!