தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது முக்கிய அரசியல் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பு அமித் ஷாவின் இல்லத்தில் நடைபெற்றது.
இதற்கு முன்னதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, பாமகவை அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைத்துக்கொண்டார். திமுக ஆட்சியை அகற்றுவதே இந்தக் கூட்டணியின் முதன்மை இலக்கு என அன்புமணி கூறினார். எடப்பாடி பழனிசாமியும் இதை வெற்றிக் கூட்டணி என கூறினார்.

இரண்டு தினங்களுக்கு முன்னர் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிச்சாமி தற்போது நயினார் நாகேந்திரனுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆலோசனை நிறைவடைந்த நிலையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்தார். அப்போது, பிரதமர் மோடி தமிழகம் வர உள்ள நிலையில் அது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜகவிற்கு எத்தனை தொகுதிகள்? தொடரும் இழுபறி?.. இபிஎஸ் உடன் நயினார் சந்திப்பு...!
கூட்டத்தை சென்னையில் நடத்துவதா? அல்லது மதுரையில் நடத்துவதா என்பது குறித்து ஆலோசனை நடந்ததாக கூறினார். இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி தமிழகம் வருவார் என்று தெரிவித்தார். தொகுதி பங்கீடு, எத்தனை தொகுதிகளில் பாஜக போட்டியிடும், அமைச்சரவையில் பங்கு கேட்கிறார்களா பாஜக என்பது தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்க நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்தார். தொகுதி பங்கீடு, எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பின்னர் பேசுவதாக கூறி சென்றார்.
இதையும் படிங்க: ஊழல் ஊற்று திமுக... பணக்கட்டுகள் எண்ணிய உடன்பிறப்புகள் சிறைக்கம்பி எண்ணுவார்கள்... நயினார் உறுதி...!