அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு, கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமியும் நயினார் நாகேந்திரனும் ஆலோசனை செய்ததாக கூறப்பட்டுள்ளது. சென்னை பசுமை வழி சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இரண்டு தினங்களுக்கு முன்னர் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிச்சாமி தற்போது நயினார் நாகேந்திரனுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா - எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பை தொடர்ந்து நயினார் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.

பாஜக கேட்கும் தொகுதிகளை அளிக்க அதிமுக தொடர்ந்து தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு சதவீதத்தை காரணம் காட்டி பாஜக அதிக தொகுதிகளை கேட்பதாகவும் சொல்லப்படுகிறது. தனித்து ஆட்சி அமைக்க அதிக தொகுதிகளில் போட்டியிட அதிமுக முயன்று வருவதாகவும் பாஜகவிற்கு அதிக தொகுதிகளை ஒதுக்கினால் பாமகவும் அதிக தொகுதிகளை கேட்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமித்ஷாவுடன் பேசியது என்ன? OPS, சசிகலாவுக்கு இடமிருக்கா..? EPS பரபரப்பு பேட்டி...!
கூட்டணியில் கடந்த முறை பூட்டி விட்டதை விட அதிக தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாக தெரிகிறது. இன்னும் சில தினங்களில் தொகுதி பங்கீடு குறித்த சமூக முடிவு எட்டப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தொகுதி பங்கீடு முடிவு எட்டப்பட்ட பிறகு எந்தெந்த தொகுதிகளில் வேட்பாளர்கள் களம் காண்பார்கள் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக கூட்டணியில் பாமக... டெல்லி விரையும் இபிஎஸ்..! அமித் ஷா உடன் முக்கிய ஆலோசனை. !