அதிமுகவின் முக்கிய தலைவராகவும், தேனி மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க தலைவராகவும் திகழ்ந்தவர் ஓ. பன்னீர்செல்வம். மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்த இவர், பலமுறை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர்.
2017-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், பின்னர் தனித்தனி அணியாகவும் செயல்பட்டார். இருப்பினும், 2022-ல் கட்சியின் பொதுக்குழு மூலம் இபிஎஸ் ஒரே தலைவராக உயர்த்தப்பட்டதால், ஓபிஎஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்தப் பின்னணியில், பாஜகவுடனான கூட்டணி மற்றும் அதன் அரசியல் உத்திகளில் ஓபிஎஸ் புறக்கணிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தங்களது உறவை முற்றிலுமாக முறித்துக் கொண்டதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். கூட்டணி தொடர்பான எந்த அறிவிப்பு குறித்தும் ஓபிஎஸ் தரப்பு வெளிப்படுத்தவில்லை. தமிழக வெற்றி கழகத்தோடு ஒபிஎஸ் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.
இதையும் படிங்க: சும்மா நோண்டாதிங்க! ஓபிஎஸ் பற்றி தரக்குறைவாக பேசக்கூடாது... செல்லூர் ராஜு காட்டம்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சதித்து பேசினார். அப்போது, ஓபிஎஸ் என்னிடம் சொல்லி இருந்தால் பிரதமரை சந்திக்க நேரம் வாங்கி கொடுத்திருப்பேன் என்றார். கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து ஓபிஎஸ்-இன் முடிவில் நான் கருத்து சொல்ல முடியாது என்று கூறினார்.
ஓபிஎஸ் முதல்வரை சந்தித்த காரணம் தெரியவில்லை என்றும் தொகுதி பிரச்சனகோ, சொந்த பிரச்சனைக்கோ சந்தித்து இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
ஓபிஎஸ் கேட்டால் முதல்வரை சந்திக்க நேரம் வாங்கி தர ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அல்லாடும் உறுப்பினர்கள்! கூட்டுறவு வீட்டு வசதி சார்ந்த வட்டிகளை தள்ளுபடி செய்யுங்கள் -ஓபிஎஸ்