×
 

பாக்., சின்ன தப்பு பண்ணிருந்தாலும்?! மொத்தமா சிதைச்சிருப்போம்! ராணுவ தளபதி தகவல்!

'ஆபரேஷன் சிந்துார் தாக்குதல் நடத்தியபோது, பாகிஸ்தான் ஏதேனும் தவறான செயலில் ஈடுபட்டால், தரைப்படை மூலம் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்தோம்' என்று ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி கூறினார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் ஏதேனும் தவறான நடவடிக்கை எடுத்திருந்தால், தரைப்படை மூலம் முழு அளவிலான தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் குண்டு மழை பொழிந்த ஆபரேஷன் சிந்தூர் குறித்து விரிவாக பேசிய அவர், “தாக்குதலின் போது பாகிஸ்தான் எந்த தவறான செயலிலும் ஈடுபட்டால் அதை எதிர்கொள்ள தரைப்படை முழு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

போர் நிறுத்தம் செய்யும் அளவுக்கு பாகிஸ்தான் ராணுவம் தோற்றுப்போனதால் மட்டுமே தரைப்படை தாக்குதல் தேவைப்படவில்லை” என்று விளக்கினார்.

இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூர்! அடிவாங்குனது உண்மை தான்!! பொளந்து கட்டிய இந்தியா!! உண்மையை ஒப்புக்கொள்ளும் பாக்.,!

ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய 88 மணி நேரத்தில் நடந்த நிகழ்வுகளை விளக்கிய அவர், “இப்போதும் பாகிஸ்தானில் 8 பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. சர்வதேச எல்லையில் 2 முகாம்களும், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அப்பால் 6 முகாம்களும் உள்ளன. இவற்றை இந்திய ராணுவம் தொடர்ந்து முழுமையாக கண்காணித்து வருகிறது. 

உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய முதல் நாள் முதலே எங்கள் கண்காணிப்பு மிகத் தீவிரமாக உள்ளது. இது தொடரும்” என்று தெளிவுபடுத்தினார்.

பாகிஸ்தான் தரப்பில் இருந்து போர் நிறுத்தம் கோரியதை ஏற்று தாக்குதலை நிறுத்தியதாகவும், ஆனால் எந்த நேரமும் பாகிஸ்தான் தவறு செய்தால் உடனடியாக பதிலடி கொடுக்க தயார் நிலையில் இருப்பதாகவும் ராணுவ தலைமை தளபதி உறுதிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூர் 2.0! இறங்கி அடிக்கும் இந்தியா! குலைநடுங்கும் பாக்.,! மீண்டும் போர் பதற்றம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share