×
 

பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் பிரபாகரனை ஒப்பிட்ட மத்திய அமைச்சர்...! கடும் சர்ச்சை..!

பாலியல் குற்றவாளியை பிரபாகரன் சந்திப்புடன் மத்திய அமைச்சர் ஒப்பிட்டு பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங்புரி சமீபத்தில் எழுப்பிய ஒரு ஒப்பீடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற பாலியல் குற்றவாளியுடன் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஒப்பிட்டுப் பேசிய விவகாரம் தொடர்பானது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர் சிறுமிகளை பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கியவர், குழந்தைகள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர். அவரது வழக்கு தொடர்பான பல ஆவணங்கள், மின்னஞ்சல்கள், பெயர்கள் சமீபத்தில் வெளியாகியபோது, இந்தியாவில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் அனில் அம்பானி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி போன்றோரின் பெயர்கள் அடிபட்டன.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ஹர்தீப் சிங் பூரியின் பெயர் எப்ஸ்டீனுடன் மின்னஞ்சல் பரிமாற்றம் மற்றும் சில சந்திப்புகள் இருந்ததாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் எழுப்பி கேள்வி கேட்டார். இதனால் அழுத்தம் அதிகரித்த நிலையில், ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.அப்போதுதான் அவர் தனது பதிலில் ஒரு ஒப்பீட்டை முன்வைத்தார். தான் எப்ஸ்டீனை 3 அல்லது 4 முறை மட்டுமே சந்தித்ததாகவும், அது தனது முன்னாள் பணியிடமான இன்டர்நேஷனல் பீஸ் இன்ஸ்டிடியூட் சார்பில் ஒரு டெலிகேஷன் உறுப்பினராகவும், தனிப்பட்ட தொடர்பு இல்லை என்றும் கூறினார்.

அவரது முதலாளி டெர்ஜே ரோட்-லார்சன் எப்ஸ்டீனை அறிந்திருந்ததால் அந்த சந்திப்புகள் நடந்ததாக விளக்கினார். மேலும், தனது தொழில் வாழ்க்கையில் பலரை சந்திக்க வேண்டியிருந்ததை எடுத்துக்காட்டினார்.அதில் ஒரு உதாரணமாக, இலங்கையில் இந்தியத் தூதரகத்தில் பணியாற்றியபோது, இளம் அதிகாரியாக இருந்த தான் விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பப்பட்டதை குறிப்பிட்டார். நான் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன் என்றால், அதற்காக நான் பயங்கரவாதியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவன் ஆகிவிட மாட்டேனே என்று கேள்வி எழுப்பினார். அதாவது, எப்ஸ்டீனுடன் சந்தித்தது போலவே, பிரபாகரனுடன் பேசியதும் தனது பணியின் ஒரு பகுதி என்றும், அதனால் அவர்களுடைய குற்றங்களை தான் ஆதரிப்பதாக அர்த்தமில்லை என்றும் வாதிட்டார்.

இதையும் படிங்க: அகமதாபாத் விமான விபத்து! விமானியில் திட்டமிட்ட சதி?! 260 பேரில் உயிரை குடித்த விபத்து குறித்து இத்தாலி பத்திரிகை தகவல்!

இந்த ஒப்பீடு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் எப்ஸ்டீன் ஒரு பாலியல் குற்றவாளி, சிறுமிகளை சுரண்டியவர் என்ற குற்றச்சாட்டு மிகத் தெளிவாக இருக்க, பிரபாகரன் இலங்கையில் தமிழ் மக்களின் போராட்டத்தை வழிநடத்தியவர் என்று பல தமிழர்களால் பார்க்கப்படுபவர். அவரை ஒரு பாலியல் குற்றவாளியுடன் சமமாக ஒப்பிடுவது பலருக்கு ஏற்புடையதாக இல்லை என கருதுகின்றனர். இது தமிழகம் உட்பட பல இடங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்தது. சிலர் இதை அரசியல் ரீதியாக எதிர்க்கட்சிகள் பயன்படுத்த முயன்றாலும், பிரபாகரனை இப்படி ஒப்பிடுவது தமிழ் உணர்வுகளை புண்படுத்துவதாகவே பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: மக்கள் பணியில் பங்கு கேட்டால் சதியா? திமுகவை தொடர்ந்து வம்பிழுக்கும் காங்கிரஸ் M.P..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share