தலைமறைவான நெகல் மோடியை தட்டி தூக்கிய அமெரிக்கா.. விரைவில் நாடு கடத்த திட்டம்..
நெகல் மோடி 4ம் தேதி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை ஜூலை 17ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
குஜராத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் நீரவ் மோடி, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் வைர வியாபாரம் செய்து வந்தார். இவரும் இவரது உறவினர் மெஹுல் சோக்சியும் சேர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, நாட்டை விட்டு தப்பிய இருவரும் வெளிநாடுகளில் தலைமறைவாக வசித்து வந்தனர். இருவர் மீதும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் பண மாேசடி மற்றும் சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தினர்.
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி நடவடிக்கையை தொடர்ந்து மத்திய அரசின் தொடர் முயற்சியால், நீரவ் மோடி பிரிட்டனிலும், மெஹுல் சோக்சி பெல்ஜியத்திலும் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: நாடே அழுதப்போ கொண்டாட்டம் ஒரு கேடா! ஏர் இந்தியா ஊழியர்களின் தரம் கெட்ட செயலால் அதிர்ச்சி!
இருவரையும் நாடு கடத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நீரவ் மோடி செய்த பண மோசடி மற்றும் சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் முக்கிய தொடர்புடைய அவரது சகோதரர் நெகல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் நெகல் மோடி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, அவரை தேடி வந்தனர். அவர் அமெரிக்காவில் இருப்பதை அறிந்த நம் அதிகாரிகள், நெகல் மோடியை கைது செய்ய அமெரிக்க அரசிடம் வலியுறுத்தினர். இதன் அடிப்டையில், நெகல் மோடி 4ம் தேதி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை ஜூலை 17ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
அப்போது, நெகல் மோடி ஜாமின் கோரி விண்ணப்பிக்கலாம். ஆனால், அது குறித்து கோர்ட் தான் இறுதி முடிவெடுக்கும் என அமெரிக்க அதிகாரிகள் கூறினர். நீரவ் மோடியுடன் இணைந்து பல கோடி ரூபாய் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், சட்ட விரோகமாக பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும் நெகல் மோடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது.
இந்திய வங்கிகளில் பண மோசடி செய்துவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் சோக்சி ஆகியோர் அங்கேயே கைது செய்யப்பட்டு, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. அந்த வரிசையில், தற்போது நெகல் மோடியும் கைது செய்யுப்பட்டள்ளார். அவரையும் நாடு கடத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் கூறினர்.
இதையும் படிங்க: ஐ.நா., விசாரணை வேண்டாம்.! நாங்களே பார்த்துக்குறோம்! ஏர் இந்தியா விமான விபத்தில் மத்திய அரசு திட்டவட்டம்..