“அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறட்டும்!” விநாயகர் சதுர்த்தியில் பிரதமர் மோடி வாழ்த்து!
பிள்ளையாரின் அருளால் இந்தியா தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டும் என தான் பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று பக்தி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகள், கோயில்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதிகாலை முதலே பக்தர்கள் விநாயகரை வழிபட்டு, தடைகள் நீங்கி வாழ்வில் வளமும் வெற்றியும் கிடைக்க வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், விநாயகரின் அருளால் மக்களின் வாழ்வில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.
தடைகளை அகற்றும் கணபதியை பக்தியுடன் வழிபடுவதும், அவரது தரிசனத்தைப் பெறுவதும் அனைவரது வாழ்விலும் புத்துணர்ச்சியையும் ஊக்கத்தையும் அளிக்கட்டும் என பிரதமர் தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார். மேலும், விநாயகரின் அருளால் மக்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மும்பையில் விநாயகர் ஊர்வலத்தில் பயங்கரம்! 22 அடி சிலை சரிந்து 2 பேர் பலி! பெண் குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்!
பிள்ளையாரின் அருளால் இந்தியா தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டும் என தான் பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பக்தர்களின் துயரங்களை போக்கி, தீமைகளை அழிக்கும் விநாயகரை வணங்குவதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனுடன், விநாயகர் வழிபாட்டுடன் தொடர்புடைய “முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்” என தொடங்கும் கணேச பஞ்சரத்ன ஸ்லோகம் இடம்பெற்றுள்ள காணொளியையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். விநாயகர் சதுர்த்தி நாளில் பிரதமரின் வாழ்த்து மற்றும் ஸ்லோக காணொளி பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாகவும், பக்தியுடனும் விழாவை கொண்டாடி வருகின்றனர். தடைகள் நீங்கி, நாட்டில் அமைதி, வளம், முன்னேற்றம் பெருக வேண்டும் என்பதே இந்த பண்டிகை நாளில் பலரின் பிரார்த்தனையாக உள்ளது.
இதையும் படிங்க: மோடியின் இரவு விருந்துக்கு வராத ஜின்பிங்! பரபரப்பை ஏற்படுத்திய சீன அதிபர் முடிவு! ஓட்டலுக்கு திரும்பியது ஏன்?