×
 

பிரதமர் மோடிக்கு திடீர் போன் செய்த துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்! இந்தியா–அமெரிக்க உறவில் புதிய நகர்வு!

சில நாட்களுக்குப் பிறகு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை முக்கிய துறைகளில் மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த தொலைபேசி உரையாடல் சர்வதேச அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக குறிப்பிட்டுள்ளார். அப்போது இந்தியா–அமெரிக்கா இடையேயான உறவை முக்கிய துறைகளில் மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது மனைவியான உஷா வான்ஸ் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்ததற்காக வாழ்த்துகளையும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வான்ஸ் குடும்பத்தினர் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துகளை தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: “சவால்களை கண்டு அஞ்சாதீர்கள்!” “கேள்வி கேட்க தயங்காதீர்கள்” – இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!

இந்த தொலைபேசி உரையாடல் நடைபெறும் நேரத்தில், இந்தியா–அமெரிக்கா உறவில் சில விவகாரங்கள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் பேசுபொருளாக இருந்தன. குறிப்பாக அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மத அமைப்புகள் பெறும் வெளிநாட்டு நன்கொடைகளை நிர்வகிப்பது தொடர்பான இந்திய சட்டங்களில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் குறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்தியாவின் உள்நாட்டு சட்டங்கள் தொடர்பான விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடு இருக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை இந்தியா வெளிப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், இதுபோன்ற விவகாரங்கள் இருதரப்பு உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என இந்தியா எச்சரித்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், சில நாட்களுக்குப் பிறகு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

எனினும், இரு தலைவர்களுக்கும் இடையேயான தற்போதைய தொலைபேசி உரையாடலில் வெளிநாட்டு நன்கொடை சட்ட விவகாரம் குறித்து நேரடியாக விவாதிக்கப்பட்டதா என்பது குறித்து பிரதமர் மோடியின் பதிவில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பை மேற்கொண்டு வரும் நிலையில், இரு தலைவர்களின் இந்த உரையாடல் இருதரப்பு உறவுகளின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: “யாரும் கவலைப்பட வேண்டாம்… நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்!” கூட்டணி எம்.பி.,க்களுக்கு மோடி உறுதி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share