ஹப்பாடா!! நிம்மதி!! மீண்டும் செயல்பட துவங்கியது டெலிகிராம்! பயனர்கள் பெருமூச்சு!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு ஜூன் 21-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து டெலிகிராம் செயலியின் மீது விதிக்கப்பட்ட தற்காலிகத் தடை நீக்கப்பட்டுள்ளது. நீட் மறுதேர்வு நேற்று (ஜூன் 21) வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததை அடுத்து, டெலிகிராம் மீண்டும் முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளது.
கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் டெலிகிராம் செயலி மூலம் கசிந்தது என சி.பி.ஐ. விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு டெலிகிராம் மீது ஜூன் 22 வரை தடை விதித்தது. இந்தத் தடை வெறும் பயன்பாட்டு வரம்பை மட்டும் அல்லாமல், பயனர்கள் அனுப்பும் செய்திகளை திருத்தும் (எடிட்) வசதியையும் ஜூன் 30 வரை முடக்கியது. இதனால் டெலிகிராம் பயனர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.
டெலிகிராம் நிறுவனம் இந்தத் தடையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், நீட் மறுதேர்வு வெற்றிகரமாக முடிந்ததால் மத்திய அரசு டெலிகிராம் மீதான தடையை உடனடியாக நீக்கியுள்ளது.
இதையும் படிங்க: இந்த முறை MISS ஆகக்கூடாது..! நீட் மறுதேர்வு.. TELEGRAM செயலிக்கு தற்காலிக தடை..!!
டெலிகிராம் பயனர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு செயலி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதில் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குழுக்கள், சேனல்கள், கோப்பு பகிர்வு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளன.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த நிலையில், தேர்வு நடைமுறையில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தேர்வு முறையில் பலவீனங்கள் இருப்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. மத்திய அரசு மற்றும் தேர்வு முகமைகள் இனி இத்தகைய கசிவுகள் நிகழாமல் தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
டெலிகிராம் மீதான தடை நீக்கம் இளைஞர்கள் மற்றும் இணைய பயனர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும், நீட் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பீகாரில் நீட் மறுதேர்வு: வெளிச்சத்திற்கு வந்த ஆள்மாறாட்ட முறைகேடு..!! 30 பேர் அதிரடி கைது..!!