×
 

பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பாக்., உளவாளி.. ஹாயாக சுற்றித்திரியும் ஜோதி மல்ஹோத்ரா.. பின்னணியில் சதித்திட்டமா?

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், கிஷன் ரெட்டி, அப்போதைய கவர்னர் தமிழிசை ஆகியோர் கலந்து கொண்டவிழாவில், ஜோதி மல்ஹோத்ரா கலந்து கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

காச்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் அதிரடி தாக்குதலை நடத்தி பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. அதைத் தொடர்ந்து,  இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிகழ்ந்தது. அதுவும் 4 நாளில் முடிவுக்கு வந்தது. ஆபரேஷன் சிந்தூருக்கு எதிராகவும், இந்திய ராணுவத்துக்கு எதிராகவும்  கருத்து பதிவிட்டு வருபவர்களை அந்தந்த மாநில போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், பாகிஸ்தானுக்காக உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டில் ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற யூடியூபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டிராவல் வித் ஜோ என்ற யூடியூப் சேனலை ஜோதி மல்ஹோத்ரா நடத்தி வருகிறார். பலநகரங்களுக்கு பயணித்து, அந்த பயணம் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த சேனலுக்கு, 3.77 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். 2023ல் பாகிஸ்தானுக்கு செல்ல விசா வாங்க டில்லியில் உள்ள பாக்., துாதரகத்துக்கு சென்றார். அங்கு, பாகிஸ்தான் உளவுத் துறை அதிகாரியாக பணிபுரிந்த அசன் உர் ரஹிம் என்ற டேனிஷுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரது உதவியால் விசா பெற்ற  ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தானுக்கு 4 முறை சென்று வந்துள்ளார். 

இதையும் படிங்க: பாக்.-ல் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி.. இந்தியாவில் அரங்கேற்றிய கொடூரங்கள் தெரியுமா?

இதற்கிடையே, இந்தியா, பாகிஸ்தான் சண்டையின்போது இந்திய ராணுவம் பற்றிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக டேனிஷ் மீது குற்றச்சாட்டு கிளம்பியதை தொடர்ந்து, அவரை இந்தியாவை விட்டு  மத்திய அரசு கடந்த 13ம்தேதி வெளியேற்றியது. அதன்பிறகு டேனிஷ் பற்றி மத்திய உளவுத்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் தோண்டித் துருவியபோதுதான் ஜோதி மல்ஹோத்ரா பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

டில்லியில் உள்ள பாக் துாதரகத்தில், டேனிஷை பல முறை தனியாக சந்தித்து ஜோதி மல்ஹோத்ரா பேசி உள்ளார். டேனிஷ் உதவியுடன் பாகிஸ்தானுக்கு  ஜோதி மல்ஹோத்ரா சென்றார். அவருக்கு பாகிஸ்தானில் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை டேனிஷ் செய்து கொடுத்துள்ளார். அது மட்டுமல்ல ஜோதிக்கு பாகிஸ்தானின் உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் புலனாய்வு படைகளின் அதிகாரிகளை 
டேனிஷ் அறிமுகப்படுத்தி உள்ளார். 

அந்த அதிகாரிகளின் மொபைல் எண்களை, வேறு பெயரில் தன் மொபைல் போனில் ஜோதி மல்ஹோத்ரா பதிவு செய்து வைத்துள்ளார் என தெரிய வந்தது. வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம்' போன்ற சமூக ஊடகங்கள் மூலம் பாக்., உளவுத் துறை அதிகாரிகளுடன் ரெகுலர் டச்சில் இருந்த ஜோதி, நம் நாட்டின் முக்கிய இடங்கள் உட்பட முக்கியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.  இதன்மூலம் அவர் யூடியூபர் என்ற போர்வையில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது உறுதியானது. பாகிஸ்தானுக்கு  உளவு பார்க்க, அந்நாட்டு உளவுத் துறை அதிகாரிகளிடம் இருந்து, அவர் பணம் பெற்றுள்ளார்.பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்துகளை யூடியூப்பில் பரப்பியுள்ளார் என உளவுத்துறை விசாரணையில் தெரிய வந்தது. 

ஒருமுறை டேனிஷுடன் ஜோதி மல்ேஹாத்ரா இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவுக்கு சுற்றுலா சென்று வந்துள்ளதும் தெரிய வந்திருக்கிறது. இந்த விவரங்களை ஹரியானா போலீசுக்கு உளவுத்துறை அனுப்பியதை தொடர்ந்து,  ஜோதி மல்ஹோத்ராவை ஹிசார் போலீசார் கைது செய்தனர்.  ஹிசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 

இதனிடையே செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்த விழா 2023ம் ஆண்டு ஏப்ரல் 8 ம்தேதி நடந்தது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், கிஷன் ரெட்டி, அப்போதைய கவர்னர் தமிழிசை ஆகியோர்  கலந்து கொண்டவிழாவில், ஜோதி மல்ஹோத்ரா  கலந்து கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வந்தே பாரத் ரயிலில் ஏறியும்,
செகந்திராபாத் ஸ்டேஷனின் எல்லா இடங்களிலும் அவர் சுதந்திரமாக சுற்றி திரிந்து வீடியோ எடுத்துள்ளார்.

அதே கால கட்டத்தில்தான் பாகிஸ்தானிய உளவுத்துறை அதிகாரி டேனிஷுடன் ஜோதி மல்ேஹாத்ரா தொடர்பில் இருந்துள்ளார் என்பதால், இந்த வீடியோ பரபரப்பு பேசுபொருளாக மாறியுள்ளது. ஆனால், பாகிஸ்தானுக்காக ஜோதி மல்ஹோத்ரா உளவு வேலை பார்த்ததாக அரியானா போலீசார் கூறும் குற்றச்சாட்டுகளை அவரது அப்பா ஹரிஸ் மல்ேஹாத்ரா திட்டவட்டமாக மறுக்கிறார். ஜோதி யூ டியூப் நடத்துகிறாள். அதற்காக பாகிஸ்தான் சென்றாள். இதில் என்ன தவறு? வேறெந்த சட்டவிரோத செயல்களையும் அவள் செய்யவில்லையே. முறைப்படி எல்லா அனுமதியையும் பெற்ற பிறகே பாகிஸ்தானுக்கு சென்றாள். என் மகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். எங்களிடம் இருந்து பறித்துச் சென்ற போன், லேப்டாப்களை போலீசார் திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் ஹரிஸ் மல்ஹோத்ரா கேட்டார். 

இதையும் படிங்க: இந்தியாவின் 101வது ராக்கெட்.. இத்தனை ஏற்பாடுகளுக்கு மத்தியில் தோற்றது எப்படி?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share