காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டது. இதை முன் நின்று நடத்தியது பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு. இதனை அடுத்து, பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பின்னால் இருந்து இயக்கியது பாகிஸ்தான் ராணுவமும், அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயும் தான் என்று என்.ஐ.ஏ தெரிவித்து உள்ளது. எனவே தான் பயங்கரவாதிகளுக்கு சோறு போட்டு வளர்க்கும் பாகிஸ்தானை பந்தாட அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.

சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, வர்த்தக உறவு துண்டிப்பு என்று ராஜதந்திர மற்றும் வர்த்தக ரீதியிலான தொடர்புகளை இந்தியா துண்டித்து வருகிறது. இதன் உச்சமாக ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் மிகத்தீவிரமாக நடந்து வருகின்றன.எந்த நேரமும் இந்தியா தங்களை தாக்கும் என்று உச்சக்கட்ட பீதியில் பாகிஸ்தான் உறைந்து போய் நிற்கிறது. இந்த நிலையில் தான் பாகிஸ்தானை அலற விடும் அதிரடி ஆப்ரேஷன்களில் இந்தியா தீவிரமாக இறங்கி இருக்கிறது. இதில் மிகவும் முக்கியமானது அரபிக்கடல் ஆப்ரேஷன்.
இதையும் படிங்க: இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான்.. போர் பதற்றத்திற்கு மத்தியில் ஏவுகணை சோதனை..!

இந்தியாவை மிரட்டும் வகையில் அரபிக்கடல் பகுதியில் ஏவுகணை சோதனை நடத்தப்போவதாக பாகிஸ்தான் சொன்னது. பாகிஸ்தான் கொட்டத்தை அடக்க அதே அரபிக்கடலில் ஸ்கெட்ச் போட்டது இந்தியா. முதல் சம்பவமாக, ஐஎன்எஸ் சூரத் போர் கப்பலை அரபிக்கடலில் இறக்கியது இந்தியா. நாம் இஸ்ரேலுடன் சேர்ந்து தயாரித்த ஏவுகணையை சோதனை செய்து பாகிஸ்தானை மிரட்டியது இந்தியா. இந்தியா பறக்க விட்ட ஏவுகணைக்கு Barak-8 என்று பெயர். அது ஒரு இடைமறிப்பு ஏவுகணை. கீழே இருந்து பறந்து சென்று வானத்தில் வரும் எதிரிகளின் சக்தி வாய்ந்த ஏவுகணைகள், போர் விமானங்கள், ட்ரோன்களை சல்லி சல்லியாக நொறுக்கி போடும் வல்லமை கொண்டது.

எதிரிகளின் ஆயுதம் 70 கிலோ மீட்டர் தூரத்தில் வரும் போதே, பாரக்-8 பறந்து சென்று அழித்து விடும். அரபிக்கடலில் ஏவுகணை சோதனை செய்யப்போகிறோம் என்று சொன்ன பாகிஸ்தான், தங்களுக்கு முன் இந்தியா முந்திக்கொண்டதால் பதைபதைத்து போனது. அதோடு விடவில்லை நம் கடற்படை. 2வது சம்பவமாக விமானம் தாங்கி போர் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தையும் அதே அரபிக்கடலில் இறக்கியது. விக்ராந்த் அரபிக்கடல் வந்ததும், பாகிஸ்தான் வெடவெடக்க ஆரம்பித்தது. ஒரே நேரத்தில் மேலும் 3 போர் கப்பல்களை அரபிக்கடலில் இறக்கியது. ஐஎன்எஸ் கொல்கத்தா, ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் கிரிவாக் (krivak) ஆகிய 3 போர் கப்பல்களும் அரபிக்கடல் வந்தன.

இந்த கப்பல்களில் இருந்து காலை முதல் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த ஏவுகணைகளை இந்தியா சோதனை செய்தது. நீண்ட தூரம், நடுத்தரமான தூரம் செல்லும் ஏவுகணைகளை அரபிக்கடலில் பறக்க விட்டு அசத்தியது. கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், எதிரிகளின் முகாம்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் இந்த சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. குறிப்பாக எதிரிகளை வெறித்தனமாக வேட்டையாடும் பிரமோஸ் வகை ஏவுகணைகளையும் இன்று அரபிக்கடலில் இந்தியா சோதனை செய்தது.

இந்த நிலையில் பஹல்ஹாங்கில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுக்க பிரதமர் நரேந்திர மோடி மூன்று படைகளுக்கும் முழு சுதந்திரம் அளித்துள்ளார். இதனால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது. பாகிஸ்தான் அரசாங்கமும், ராணுவமும் அச்சத்தில் உள்ளன. இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து பாகிஸ்தான் உள்ளது. அதே நேரத்தில், அரபிக்கடலில் இந்திய கடற்படை பயிற்சியைத் தொடங்கியுள்ளது.
தகவல்களின்படி, சனிக்கிழமை முதல் அரபிக்கடலில் போர்ப்பயிற்சி மே 7 வரை நீடிக்கும். இதற்கு முன்பு நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி கடற்படைத் தலைவர் அட்மிரல் தீனேஷ் கே. திரிபாத்தியுடன் பேசியுள்ளார். தற்போதைய பயிற்சி மற்றும் தயார்நிலை குறித்து அவர் பிரதமருக்கு முழுமையான தகவல்களை அளித்துள்ளார்.
இதையும் படிங்க: முடிச்சுவுட்டீங்க போங்க.. பாகிஸ்தானுக்கு எழவே முடியாத அடி.. செக் வைத்த இந்தியா..!