இந்தியாவின் மருத்துவ மற்றும் பல் மருத்துவ அனுமதிக்கான மிக முக்கியமான தேர்வான NEET UG 2026, மே 3, 2026 அன்று நாடு முழுவதும் நடைபெற்றது. சுமார் 22.7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்றனர். ஆனால், தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்தக் கசிவு டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகளை மையமாகக் கொண்டு இயங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் மறு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கசிவு குறித்த புகார்கள் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களில் எதிரொலித்தன. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. மே 12, 2026 அன்று தேசிய தேர்வு முகமை தேர்வை ரத்து செய்தது. மத்திய அரசின் ஒப்புதலுடன் CBI விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

நாடு முழுவதும் நீட் மறு தேர்வு நாளை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், நீட், கியூட் தேர்வுகளை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டையில் நீட் தேர்வை கண்டித்து SIF அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து கண்டனம் முழக்கங்களை எழுப்பினர். அப்போது சாலையில் இறங்கி போராடியவர்களை போலீசார் கைது செய்து பேருந்தில் ஏற்றினர்.
இதையும் படிங்க: இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!
வலுக்கட்டாயமாக போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து பேருந்தில் ஏற்றிய நிலையில் மீண்டும் இறங்கி ஓடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் தடுக்க முயன்றும் போராடியதால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். ஆளுநர் மாளிகை நோக்கி ஓட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: நெஞ்சை உலுக்கும் சோகம்... நீட் பயம்..! மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்..!!