நீட் என்பது National Eligibility cum Entrance Test என்று அழைக்கப்படும் இந்தியாவின் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும். இது மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவ அமைப்புகளின் MBBS, BDS, BAMS, BHMS, BUMS உள்ளிட்ட இளநிலை படிப்புகளுக்கு அனுமதி பெறுவதற்கான ஒரே தகுதித் தேர்வு ஆகும். தேசிய தேர்வு முகமை இந்தத் தேர்வை நடத்துகிறது. இதற்கு முன்பு AIPMT என்று அழைக்கப்பட்ட இந்தத் தேர்வு, 2013 முதல் NEET எனப் பெயர் மாற்றம் பெற்று, 2019 முதல் NTA மூலம் முழுமையாக நடத்தப்படுகிறது.
இந்தியா முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் MBBS உள்ளிட்ட படிப்புகளுக்கு அனுமதி பெற இந்தத் தேர்வு கட்டாயமாகும்.நீட் தேர்வு ஒரு ஒற்றை நாளில், ஒரே நேரத்தில் நாடு முழுவதும் நடைபெறும் OMR முறையிலான தேர்வு ஆகும். இது 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தமிழில் தேர்வு எழுதும் வசதியும் உள்ளது. இந்தத் தேர்வின் முக்கிய நோக்கம், மருத்துவக் கல்வியில் தரத்தை உறுதி செய்வதும், அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதும் ஆகும். முன்பு மாநில அளவில் தனித்தனியே நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகள் இப்போது NEET மூலம் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான NEET UG 2026 நாளை நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காலை 11 முதல் மதியம் 1.30 மணிக்குள் வர வேண்டும்; 1.30க்கு பிறகு வந்தால் தேர்வு மையத்தில் அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு அரைக் கை சட்டைகளே அனுமதிக்கப்படும் நிலையில் இம்முறை முழுக் கை சட்டை அணியலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்கள் பாதுகாப்புக்கு புதிய தொழில்நுட்பம்..!! இன்று நாடு முழுவதும் செல் பிராட்காஸ்ட் அலெர்ட் சோதனை..!!
மாணவர்கள் மெல்லிய ரக உடைகளை அணிந்துவர வேண்டும் என்றும் மத நம்பிக்கையின்படி குறிப்பிட்ட ஆடைகளை அணிவோர் கூடுதல் பரிசோதனைக்காக முன்கூட்டியே வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எளிமையான காலணி, செருப்புகளை அணியலாம்., தடிமனான அடிப்பாகம் கொண்ட காலணிகளுக்கு அனுமதியில்லை என்றும் வெளிப்படையாக தெரியக்கூடிய தண்ணீர் பாட்டில்களை மாணவர்கள் உடன் எடுத்துச் செல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 5 மாதங்களாக நடந்த டார்ச்சர்!! மனம் நொந்து உயிரை மாய்த்த பெண்! குடும்பத்தினரையும் மிரட்டிய டிஜிட்டல் கைது கும்பல்!