நெல்லை ஆட்டோ டிரைவர் காவல்துறையினர் தாக்கியதாக கூறி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஆதாரங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. காவல்துறையினரை அவதூறாக பேசி, தானே செல்போனை உடைத்தது உள்ளிட்ட காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. நெல்லை பாறையடி பகுதியைச் சார்ந்தவர் வேல்முருகன் வயது 28. ஆட்டோ டிரைவர் ஆன இவர் மதுரையில் சில ஆண்டுகளாக தனது குடும்பத்தோடு வசித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் 28ஆம் தேதி நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் தேரோட்ட திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் ஒரு வாரத்திற்கு முன்பாக வேல்முருகன் தனது அம்மாவிடான பாறையடி பகுதிக்கு வந்திருக்கிறார். அந்த ஒரு வாரமும் தனது அண்ணனின் ஆட்டோவில் நெல்லை நகர் பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்திருக்கிறார். ஜூன் 28ஆம் தேதி நெல்லையப்பர் கோவிலில் தேரோட்டம் நடைபெறுவதால் காவல்துறையினர் சார்பில் மாநகரத்தில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1800க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நகர் முழுவதுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். தச்சநல்லூர் பகுதிகளும் காவல்துறையினர் செக்போஸ்ட் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்பொழுது ஆட்டோ டிரைவரான வேல்முருகன் தச்சநல்லூர் பகுதியில் இருந்து பாறையடியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக வந்துள்ளார். அப்பொழுது தச்சநல்லூர் பகுதியில் செக்போஸ்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் வேல்முருகனை வழி மறித்த காவல்துறையினர் அவரது ஆட்டோவை நிறுத்தி சாவியை பிடுங்கி, செல்போனை உடைத்து ஜாதி பெயரை கூறி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நாளை மறுநாள் நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்... இன்று போலீஸ் கமிஷ்னர் விட்ட வார்னிங்...!
இதனால் மன உளைச்சல் அடைந்த வேல்முருகன் அருகில் இருந்த பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் வாங்கி வந்து காவல்துறையினர் தன்னை வழிமறித்து அவமானம் செய்த இடத்திலேயே அவர்கள் முன்பு பெட்ரோலை தன் மீது ஊற்றி தற்கொலை செய்தார். மேலும் வேல்முருகன் அங்குள்ள காவல் துறையினர் தன்னை சாதி பெயரை கூறி தாக்கியதாக வாக்குமூலமும் கொடுத்துள்ளார். இந்த விவகாரம் மக்கள் மத்தியில் பூதாகரமாக வெடித்த நிலையில் வேல்முருகன் சம்பவத்தன்று அவரது வாகனத்தை அனுமதிக்காததும் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரை அவதூறாக பேசியும் தானே செல்போனை உடைத்த காட்சிகள் அடங்கிய வீடியோக்களை தற்பொழுது காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்த வழக்கில் இது திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: மீண்டும் தலை தூக்கும் சாதிய மோதல்?... நெல்லையில் அரசு பள்ளி மாணவர்களிடையே அடிதடி... வெளியான பகீர் காரணம்...!