நெல்லையில் காதலருடன் நள்ளிரவில் பேசிக் கொண்டிருந்த சிறுமியை தாக்கி பாலியல் தொந்தரவு கொடுத்து நகை பறிப்பில் ஈடுபட்ட சிறுவன் உட்பட இருவர் கைது. ஆபாச புகைப்படங்களை செல்போனில் எடுத்தும் மிரட்டி உள்ளது அம்பலம்
நெல்லை மாநகர பகுதியைச் சார்ந்தவர் 17 வயது சிறுமி. இந்த சிறுமி டவுன் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி தன்னுடன் படிக்கும் ஒரு மாணவனை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக சிறுமி தனது காதலனுடன் நெல்லை பேட்டை மலையாள மேடு பகுதியில் நள்ளிரவு நேரத்தில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஆணவ கொலை முயற்சி... மகள், மருமகனை துடிக்க துடிக்க வெட்டிய சாதி வெறி தந்தை... கொத்தாய் தூக்கிய நெல்லை போலீஸ்...!
இதை கண்காணித்த 3 பேரைக் கொண்ட மர்ம கும்ப கும்பல் மாணவனை தாக்கி விட்டு சிறுமியையும் தாக்கி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். மேலும் அந்தரங்கமாக சில புகைப்படங்களையும் அந்த நபர்கள் தங்களது செல்போன்களை எடுத்துள்ளனர்.
மேலும் சிறுமியின் காது மற்றும் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனர். இதையடுத்து இங்கு நடந்ததை எதையும் வெளியில் சொல்லக்கூடாது எனவும் அந்த மூன்று பேர் கொண்ட கும்பல் சிறுமியை மற்றும் அந்த சிறுவனையும் மிரட்டி இருக்கிறார்கள்.
இதற்கு பயந்து போன சிறுமி தனது பெற்றோர்களிடமும் இதை தெரிவிக்காமல் பள்ளிக்கும் செல்லாமல் வீட்டிலேயே சோர்வாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவலை நெல்லை மாநகர காவல் துறையினர் ரகசிய தகவல் மூலமாக பெற்றுக் கொண்டதன் அடிப்படையில் சிறுமியை நேரடியாக சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.
அதன் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பல் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி இருக்கின்றனர். விசாரணை அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது நெல்லை தென்பத்து பகுதியைச் சேர்ந்த சுரேஷ், மற்றும் இரண்டு 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பது தெரியவந்தது.
தற்பொழுது நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் துறையினர் சுரேஷ் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு சிறுவன் ஏற்கனவே சுத்தமல்லி பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதும் தெரிய வந்தது.
நெல்லையில் நள்ளிரவு நேரத்தில் காதலருடன் பேசிக் கொண்டிருந்த சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்து அவரிடம் இருந்த நகை பணத்தை பறித்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: நெல்லையில் காதல் தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்... மருமகனை வீடு புகுந்து சல்லி, சல்லியாக வெட்டிய சாதிவெறி மாமனார்...!