வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

ஆட்டு மந்தையில் ஓநாய்..! பெண்கள் பாதுகாப்பை சூறையாடும் திமுக… நயினார் தாக்கு..!

பெண்கள் பாதுகாப்பை திமுக அரசு சூறையாடுவதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.

திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. சமீபத்தில் நடந்த பல்வேறு சம்பவங்கள் திமுக அரசை விமர்சிக்கும் வகையில் நிகழ்ந்தன. பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.

இதனிடையே, முதல்வரின் பாதுகாப்புக்குச் சென்ற பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத கொடூரம் நிகழ்ந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். கழிவறையில் பெண் காவலர்களை செல்போன் மூலம் காணொளி எடுத்துள்ளதாக வரும் தகவல் குறித்து குறிப்பிட்டுள்ள நயனார் நாகேந்திரன் திமுக அரசை சரமாரியாக சாடினார். பெண்களின் பாதுகாப்பை திமுக அரசு சூறையாடுவதாக விமர்சித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு வருகை புரிந்த முதல்வருக்குப் பாதுகாப்பு அளிக்கச் சென்ற பெண் காவலர்களைக் கழிவறையில் செல்போன் மூலம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி காணொளி எடுத்ததாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழக அரசின் புதிய செம்மொழி இலக்கிய விருது..! சாகித்ய அகாடமி பிரச்சனைக்கு மாற்றாக அறிவிப்பு..!

தான் பங்கேற்ற அரசு விழாவில், சீருடையணிந்த பெண்களுக்குக் கூட இம்மியளவும் பாதுகாப்பில்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கைச் சீரழித்துள்ள கேவலபட்ட ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் ஸ்டாலின் தமது துருப்பிடித்த இரும்புக்கரத்தைக் கொண்டு முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். ஆட்டு மந்தையில் ஓநாய் புகுந்தது போல, ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல், பெண்களின் பாதுகாப்பை சூறையாடும் திமுகவை வரும் தேர்தலில் விரட்டியடிப்பது ஒன்றே தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றுவதற்கான ஒரே வழி என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: தாமரை மலரும்.. தமிழகம் மாறும்! போதைப்பொருள் விவகாரத்தில் திமுகவை வெளுத்து வாங்கிய தமிழிசை!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी