நீலகிரி மாவட்டத்தின் இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இ_பாஸ் நடைமுறையில் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் இறுதி வரை வார நாட்களில் 6000 வாகனங்களும், வார இறுதியில் 8 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனால் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வரும் வாகனங்கள் மாவட்டத்தின் எல்லை பகுதியான கல்லாறு, குஞ்சப்பண்ணை, மேல் கூடலூர், மசினகுடி உள்ளிட்ட சோதனை சாவடிகளில் வருவாய்த் துறையினர் சோதனை மேற்கொண்டு இ பாஸ் பதிவு செய்த வாகனங்களை மட்டுமே நீலகிரி மாவட்டத்தில் அனுமதித்து வருகின்றனர்.

அவ்வாறு இ பாஸ் பதிவு செய்யாமல் வரும் வாகனங்களுக்கு இபாஸ் பதிவு செய்த பின் நீலகிரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் வார விடுமுறையை ஒட்டி கேரளா, கர்நாடகாவில் இருந்து மேல் கூடலூர் வழியாக உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வருகை புரிந்த நிலையில் மேல் கூடலூர் சோதனை சாவடியில் இ பாஸ் சர்வர் முற்றிலும் முடங்கியுள்ளது.

இதையும் படிங்க: தொடரும் ரெட் அலர்ட்... நீலகிரியில் 2வது நாளாக சுற்றுலா தளங்கள் மூடல் - எப்போது திறப்பு?
இந்நிலையில் சுமார் 2 மணி நேரமாக சர்வர் முழுவதும் முடங்கி உள்ளதால் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றுலா பயணிகள் காத்து கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது சில சுற்றுலா பயணிகள் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
சில வாகனங்களை இங்கிருந்து மசினகுடி சென்று உதகை செல்லுமாறு அறிவுறுத்து உள்ள சூழ்நிலையில் கூடுதலாக 40 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இ பாஸ் சோதனை மையத்தில் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.. முதல்வரிடம் காட்டி வாழ்த்து பெற்ற மா.சு..!