சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து வடக்கு கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஓடிசா-மேற்கு வங்காள கடலோர பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த 'காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா கடலோர பகுதிகளை பாலசோர் பகுதிகளுக்கு அருகில் கரையை கடந்தது.
இதனால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரையிலான பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இம்மாதம் தாமதமாக துவங்கிய பருவமழை காரணமாகவும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாகவும் நீலகிரி மாவட்ட அணைகள் மற்றும் நீரோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதையும் படிங்க: நாங்க டச்சு கூட பண்ணதில்ல... ஜெயலலிதா பெயரை சொல்லி தவெகவுக்கு பதிலடி கொடுத்த துரைமுருகன்...!
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லட்சும் பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: விஜய்யின் கரூர் பயணத்திற்கு எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் திமுக இடையீடு..!! இன்று விசாரணை..!!