மதுரை எஸ்.எஸ்.காலனியில் நியோமேக்ஸ் என்ற நிதி நிறுவனம் டெபாசிட்களுக்கு கூடுதல் வட்டி தருவதாக தெரிவித்ததன் அடிப்படையில் பல ஆயிரம் பேர் பல லட்சம் ரூபாயை நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் பெயரில் டெபாசிட் செய்தனர். பணத்தை திரும்ப செலுத்தாத நிலையில் நியோமேக்ஸ் நிறுவனம் மீது புகார்கள் குவிந்தன. போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நியோ மேக்ஸ் நிதி நிறுவன மோசடி தொடர்பான பொருளாதார குற்றப்பிரிவு அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்றும் பணத்தை இழந்தவர்களுக்கு இதுவரை 10% நிதி கூட கொடுக்கப்படாத வேதனை அளிப்பதாகவும் கூறி இருந்தார். மேலும் மோசடி வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதுடன் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் தொகையை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், நியோமேக்ஸ் நிறுவன வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது. வழக்கில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க எளிமையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டுக்கு கூடுதல் வட்டி, இரட்டிப்பு பணம் எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட வழக்கின் விசாரணையை செப்டம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.
இதையும் படிங்க: பரபரப்பு... ஏர்போர்ட் மூர்த்திக்கு ஒரு நாள் போலீஸ் காவல்! எழும்பூர் நீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சி
மேலும், நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் புகாரளிக்க அக்டோபர் 8ம் தேதி வரை இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அக்டோபர் எட்டாம் தேதி வரை புகார் அளிப்பவர்களுக்கு மட்டுமே இழந்த தொகை பெற்றுத்தரப்படும் என்று நீதிமன்றம் அறிவித்தது.
இதையும் படிங்க: அது செல்லாது.. அதிமுக விதி திருத்ததிற்கு எதிராக CASE போட கூடாது.. ஹைகோர்ட் தடாலடி உத்தரவு..!